Homeசெய்திகள்மாஸ்கோ தாக்குதல்: 133 பேர் உயிரிழந்த பரிதாபம்..! என்ன நடந்தது?

மாஸ்கோ தாக்குதல்: 133 பேர் உயிரிழந்த பரிதாபம்..! என்ன நடந்தது?

ரஷ்யாவில் கடந்த (21.03.2024) அன்று இசை கச்சேரி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கததில் மர்மநபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் ரஷ்யாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 60 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எனவே இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இந்த தாக்குதலில் இதுவரை 133 பேர் கொல்லப்பட்டதுடன் 145க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என அனைவரையும் பிடிப்பதற்கு ரஷ்ய பாதுகாப்புத்துறை தீவிரம் காட்டியது. இதன காரணமாக இந்த கொடூர சமபவத்தில் (Moscow Attack) ஈடுபட்ட 4 பேரை ரஷ்ய பாதுகாப்புத்துறை கைது செய்துள்ளது. மேலும் 10 பேர் விசாரணை வளையத்தில் பாதுகாப்புத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 32 வயதான டேலர்ட்ஜோன் மிர்சியோயேவ், 30 வயதான சைதாக்ரமி ரச்சபலிசோடா, 19 வயதான முகமதுசோபிர் ஃபைசோவ், 25 வயதான ஷம்சுதீன் ஃபரிதுன் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் மூவர் தவறை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் முகமதுசோபிர் ஃபைசோவ் என்பவருக்கு விசாரணையின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சர்க்கர நாற்காலியின் உதவியுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Moscow Attack Criminals

மேலும் இந்த குற்ற சம்பவத்தில் (Moscow Attack in Tamil) கைது செய்யப்பட்டவர்களிடம் கடுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு (Moscow Attack Criminals) நிச்சயம் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு..! எந்த மாவட்டத்தில் தெரியுமா?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular