தமிழகம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு சார்பில் பல புதிய நடவடிக்கைகள் புதிய திட்டங்களும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுதான் வருகிறது. அந்த வரிசையில் தான் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் புதிய நடிவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் கே.கே.நகரில் உள்ள வெரோனிகா மேரி என்பவர் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்து இருந்தார்.இந்த மனுவில் அவர் கூறியதாவது, குழந்தை இல்லாத தம்பதிகள் நலனைக் கருத்தில் கொண்டு ஆந்திரா மற்றும் கேரளாவில் சில அரசு மருத்துவமனைகளில் செயற்கை முறையில் கருத்தரித்தல் சிகிச்சை மையங்கள் (Artificial Fertilization Center) துவக்கப்பட்டுள்ளன.
எனவே ஏழைகளின் நலன் கருதி மதுரை அரசு மருத்துவமனை உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையங்கள் மற்றும் அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த பொதுநல வழக்கினை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி மும்மினேனி சுதீர் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில் நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவ நிறுவன வளாகத்தில் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த மையம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் ரூ.1 கோடியே 36 லட்சத்து 76 ஆயிரத்து 760 மதிப்பில் மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் (Artificial Fertility Center) அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த பரிந்துரை தற்போது நிலுவையில் உள்ளது என்றும் தெரிவித்தனர். மேலும் இதற்கு அரசு தரப்பில் இருந்து ஒப்புதல் கிடைத்த பிறகு பணிகள் துவங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: Paytm Payments Bank: விதிகளை மீறியதற்காக அபராதம் விதிப்பு..!எத்தனை கோடி தெரியுமா? |