ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் உலக பணக்காரர்களில் ஒருவர் தான் முகேஷ் அம்பானி. இவரை தெரியாத மக்களே இருக்க முடியாது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் தான் சில மாதங்களில் இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் பல தொழிலதிபர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒவ்வொரு விஷயமும் பலரை கவர்ந்தது. இந்த வரிசையில் முக்கிய இடத்தை பிடிப்பது சாப்பாடு தான். இந்த விழாவில் (Ambani House Wedding) சாப்பாடு ஏற்பாடுகள் அருமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் சமைத்த அனுபவம் குறித்து தமிழர் ஒருவர் தனது கருத்தை பகிர்ந்துள்ளார் இதை பற்றி பார்க்கலாம்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு மொத்தம் 2,500 வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவில் தென்னிந்திய வகை உணவுகளை சமைக்க சென்னையை சேர்ந்த அறுசுவை ஸ்ரீதர் (Arusuvai Sridhar) என்பவர் தான் சென்று இருந்தார்.
இந்த அனுபவம் பற்றி அவர் கூறுகையில், நான் அம்பானி வீட்டிற்கு கடந்த 8 ஆண்டுகளாக தென்னிந்திய உணவுகள் சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர் கூறினார். மேலும் அவர் அம்பானியின் மகன் மற்றும் மகள் திருமணத்திலும் சமைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இவர் முதன்முதலாக அம்பானியின் சகோதரி மகளின் திருமணத்தில் அறிமுகமானேன் என்றும் அந்த திருமணத்தின் போது ஐடிசி ஹோட்டலில் தனியாக கிச்சன் கொடுத்து அனுமதி அளித்தார்கள் என்றும் மகிழ்ச்சியுடன் அவர் கூறியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் முதன் முதலில் தலை வாழை இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது. அங்கு, அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சச்சின், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு எங்களது உணவுகள் பிடித்து போக தென்னிந்திய உணவுகள் சமைக்க வேண்டும் என்றால் எங்களை அழைப்பார்கள் என்று கூறினார். மேலும் ஆனந்த் அம்பானியின் Pre Wedding நிகழ்ச்சிகளுக்கு சமைப்பதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அழைப்பு விடுத்தார்கள். எனவே பிப்ரவரி 8-ம் தேதி முதல் 20 நாட்களுக்கு பல விதமான தென்னிந்திய உணவுகளை சமைத்துக் கொடுத்தோம் என்று கூறியுள்ளார்.

ஆனந்த் அம்பானியின் (Ambani Son Wedding) திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிக்கு சமைக்கும் போது இண்டிகோவில் டிக்கெட் வாங்கி கொடுத்து நன்றாக கவனித்தார்கள். அதுமட்டுமின்றி பில்கேட்ஸ் குடும்பத்தினருடன் வந்த போது வடையை பார்த்து இது என்னவென்று கேட்டார் அப்போது அதை ‘spicy donut’ என்று சொன்னார்கள். அவர் அதை சாப்பிட்டு விட்டு திரும்பவும் ஒன்று கேட்டார். இது தான் எங்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். இன்னும் பல தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: குட் நைட் திரைப்பட கதாநாயகியின் திருமணம் முடிந்தது..! மாப்பிள்ளை யார் தெரியுமா? |