டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) சிறையில் இருந்தபடியே மாநிலத்தை ஆட்சி செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் சமீபத்தில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போதைய திகார் (Arvind Kejriwal in Jail) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டும் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே சில அறிவுறைகளை அவரது அமைச்சர்களுக்கு வழங்கி வருகிறார். அதன்படி அமைச்சர்கள் ஆட்சி செய்து வருகிறார்கள் என கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிறையில் இருந்தபடியே டெல்லியை ஆட்சி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் (Petition filed by Arvind Kejriwal) செய்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். பிரதமர் அல்லது ஒரு மாநில முதல்வர் சிறையில் இருந்து ஆட்சி செய்ய இந்திய சட்டத்தில் எந்த வித தடையும் இல்லை என Arvind Kejriwal அளித்த மனுவில் சுட்டியாட்டி உள்ளார் என கூறப்படுகிறது.
டெல்லி முதல்வர் நீதிமன்றத்தில் அளித்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மனுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
மேலும் படிக்க: முதல்ல டாஸ்மாக் மூடுங்க.. அப்புறம் ஓட்டு போறோம்.. உதயநிதியிடம் பெண்கள் வாக்குவாதம்..! |