சீனாவில் இந்த ஆண்டிற்கான ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டி ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் நீளம் தாண்டுதல் டி-64 என்ற பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரா் தர்மராஜ் சோலைராஜ் பங்கேற்றார்.
இதில் அவர் 6.80 என்ற புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அவர் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்க பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். இதே பிரிவில் இலங்கையைச் சேர்ந்த மத்தக கமாகே 6.68 என்ற புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தையும், ஜப்பான் வீரர் மதாயோஷி கோட்டோ 6.35 என்ற புள்ளிகளை பெற்று மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தையும் வென்றார்.
தங்கம் வென்ற தர்மராஜ் சோலைராஜுக்கு பிரதமர், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
துளசிமதி முருகேசன்
நேற்று நடைபெற்ற Badminton மகளிர் SU5 பிரிவில் Thulasimathi Murugesan சீனாவை சேர்ந்த யாங் ஜியுஜி-வை 21-19, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. இதே பிரிவில் இந்திய வீராங்கனை மணிஷா ராமதாஸ் வெண்கலம் வென்றார்.
தற்போது வரை இந்தியா மொத்தமாக 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தமாக 111 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.