Homeவிளையாட்டு6 wickets in 6 balls: அசத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்...

6 wickets in 6 balls: அசத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்…

உலக அளவில் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று Cricket. இவ்விளையாட்டில் பல வீரர்கள் பல வகையான சாதனையை புரிந்து தான் வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது 6 wickets in 6 balls என்ற வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார் காரேத் மோர்கன். இவர் ஆஸ்திரேலியாவின் உள்ளுர் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் Gold Coast Premier League எனும் உள்ளூர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் சர்பெர்ஸ் பாரடைஸ் மற்றும் முட்ஜீரபா (Surfers Paradise and Mudgeeraba) அணிகள் மோதின. இப்போட்டியில் 179 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சர்பெர்ஸ் பாரடைஸ் அணிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. இந்த கடைசி ஓவரை முட்ஜீரபா அணியில் இருந்து காரேத் மோர்கன் வீசினார்.

Gareth Morgan

இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் Surfers Paradise அணி வெற்றி பெறும் என எதிர்ப்பார்த்த நிலையில் Gareth Morgan 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஓவரில் மூலம் போட்டியே தலைகீழாக மாறியது. இதன் மூலம் இவர் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular