Homeசெய்திகள்60 வயதில் காதலியை கரம் பிடிக்கும் பிரதமர்..! இது என்ன புது டிவிஸ்ட்..!

60 வயதில் காதலியை கரம் பிடிக்கும் பிரதமர்..! இது என்ன புது டிவிஸ்ட்..!

காதலுக்கு வயது இல்லை என்று சொல்வார்கள் ஆனால் காதலிப்பவர்களுக்கும் வயது இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆம் தற்போது பிரதமர் ஒருவர் தன் 60-வது வயதில் தன் காதலியை திருமணம் செய்யவுள்ளதாக கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

அந்தோணி அல்பானீஸ் இவர் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஆவார். இவருக்கு இப்போது வயது 60. இவருடைய நீண்ட நாள் காதலி ஜோடீ ஹெய்டன் (Jodie Haydon). இவருக்கு வயது 46. இந்நிலையில் இவர் தன் நீண்டநாள் காதலியான ஜோடீ ஹெய்டனை திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் (Australia Prime Minister) அந்தோணி அல்பானீஸ் கடந்த 2020-ம் ஆண்டு நிகச்சி ஒன்றில் ஹெய்டனை முதல்முறையாக சந்தித்துள்ளார். அதற்கு பின் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் இவர் கலந்துக்கொண்டார். அப்போது இருவரும் சேர்ந்து ஒன்றாக பிரச்சாரத்திற்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர் பிரதமர் ஆன பின்பு துபாய், மேட்ரிட், பாரீஸ், லண்டன் மற்றும் புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு தன்னுடம் தன் காதலியான ஹெய்டனை அழைத்துச் சென்றுள்ளார். இதன் பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முடிவை (Australia Prime Minister marriage News) எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பதவியில் இருக்கும்போது, திருமணத்திற்கு நிச்சயம் நடந்த முதல் பிரதமர் அல்பானீஸ் (Anthony Albanese) தான். இந்த செய்தியை அந்நாட்டு ஊடகங்கள் வாயிலாக அறியலாம். எனினும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ்க்கு இதற்கு முன்னரே திருமணம் ஆனதும் அவருக்கு ஒரு மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Australia Prime Minister marriage
இதையும் படியுங்கள்: புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பு..! ரஷ்ய அதிபர் முக்கிய அறிவிப்பு..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular