சினிமா

பொங்கல் போட்டியில் வென்றது எந்த படம்..! இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பாக்கலையே..!

வருடாவருடம் பொங்கலுக்கு பல படங்கள் வெளியாவது வழக்கம் தான். அதிலும் பிரபலாமான நடிகர்களின் படங்கள் வெளியாவது சாதாரணமாக மாறிவிட்டது. ஆனால் ஒரே நாளில் வெளியாகும் படங்களுக்கிடையேயான போட்டியானது இன்னும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.

ஆம் நம் தமிழ்நாட்டில் இதுபோன்ற பண்டிகைகளுக்கு வெளியாகும் படங்கள் மீதான ஆர்வம் என்பது மிக அதிகம். அதிலும் பிரபலமான முன்னனி நடிகர்களின் படங்கள் என்றால் அதன் மீதான எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகமாகிவிடுகிறது. இதுபோல தான் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு (Pongal Race) தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களாக தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியவர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானது.

இரண்டு நடிகர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றே. இந்நிலையில் இந்த படங்களில் ரிலீஸ் திருவிழாப் போல் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. இந்த திரைப்படங்கள் வெளியான நாள் முதலே எந்த படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றிப்பெறப் போகிறது என்ற ஆர்வம் அனைவரிடமும் இருந்து தான் வந்தது. ஆனால் இந்த போட்டியில் தனுஷ் படமான கேப்டன் மில்லர் வசூல் தான் அதிகம் இருக்கும் என்றும் இப்படம் தான் வெற்றிபெறும் என்று பலராலும் கூறப்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது இந்த படங்களின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. பொங்கல் ரிலீஸாக அயலான், கேப்டன் மில்லர், மிஷன் மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் என 4 படங்கள் வெளியாகின. மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

வெளியான நாள் முதலே எந்த படம் அதிக வசூல் பெறப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இந்நிலையில் தற்போது அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்டன. மேலும் பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு அயலான் படத்துக்கு திரையரங்குகளில் அதிகமான ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டன. எனவே இப்படத்தின் வசூல் (Ayalaan Box Office Collection) தொடர்ந்து அதிகரித்தது.

இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று (21.01.2024) அயலான் திரைப்படம் 2.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இதோடு சேர்தது ஒட்டுமொத்தமாக அயலான் படம் இதுவரை 70 கோடிக்கு அதிகமாக கலெக்‌ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல நேற்று ஞாயிற்று கிழமை கேப்டன் மில்லர் படத்தின் வசூல் (Caption Miller Box Office Collection) 1 கோடி ரூபாய் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை ஒட்டுமொத்தமாக கடந்த 10 நாட்களில் இப்படத்தின் வசூல் 50 கோடி வரை இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்: Ayalaan Box Office Collection: வசூலில் பட்டைய கிளப்பும் அயலான்..!

இந்த தகவல்கள் மூலம் பலரும் எதிர்ப்பார்க்காத வகையில் கேப்டன் மில்லர் படத்தை விட அயலான் இந்தாண்டுக்கான பொங்கல் போட்டியில் (Pongal Race) வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. இதுபோல விமர்சனம் ரீதியாக அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் திரைப்படம் மற்றும் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.

அருண் விஜய்யின் மிஷன் திரைப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 23 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளயாகியுள்ளது. மேலும் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படம் உலகம் முழுவதும் 16 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: Ayalaan Movie Review in Tamil..!அயலான் திரைப்படத்தின் விமர்சனம்..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago