Bajaj Pulsar N250: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மிகப்பெரிய ஆட்டோமெபைல் நிறுவனமாகும். இருசக்கர வாகன உற்பத்தியில் உலகின் நான்காவது உற்பத்தியாளராகவும், இந்தியாவின் இரண்டாவது இருசக்கர வாகன உற்பத்தியாளராகவும் இருக்கிறது. பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் என் 250 பைக்கின் புதிய அப்டேட்டை (Bajaj Pulsar N250 2024) ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியிட இருக்கிறது. இந்த பைக்கில் டிஜிட்டல் டிஸ்பிளே, டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட அப்டேட்டுகள் வர உள்ளன.
நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி இந்த பைக்கின் டிசைன் மற்றும் அளவுகள் எல்லாம் பழையது போல தான் இருக்கும். இந்த பைக்கில் கொண்டுவரப்பட உள்ள டிஜிட்டல் டிஸ்பிளேவில் கால் நோட்டிஃபிகேன் உள்ளிட்டவை கொண்டுவரலாம் என தகவல் கூறப்பட்டுள்ளது. ப்ளூடூத் கனக்டிவிட்டி போன்றவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Bajaj Pulsar N250 Details in Tamil)பஜாஜ் பல்சர் N250 ஆனது 249cc BS6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. பஜாஜ் பல்சர் N250 ஆன்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது. இந்த பல்சர் என்250 பைக் 162 கிலோ எடையும், 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கையும் கொண்டுள்ளது. புதிய செமி-டிஜிட்டல் கன்சோலுடன் எளிதான மற்றும் பாதுகாப்பான கியர்ஷிஃப்ட்களுக்கான உதவி மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளது.
Bajaj Pulsar N250 – Specifications (விவரக்குறிப்புகள்)
இடப்பெயர்ச்சி (Displacement) | 249 சிசி |
அதிகபட்ச சக்தி | 24.1 bhp @ 8750 rpm |
அதிகபட்ச முறுக்கு | 21.5 Nm @ 6500 rpm |
மைலேஜ் (Mileage) | 44 kmpl |
சவாரி வரம்பு | 490 கி.மீ |
உச்ச வேகம் | மணிக்கு 132 கி.மீ |
சிலிண்டர்கள் | 1 |
எரிபொருள் வகை (Fuel Type) | பெட்ரோல் |
முன் பிரேக் வகை | வட்டு |
பின்புற பிரேக் வகை | வட்டு |
கர்ப் எடை | 162 கிலோ |
இருக்கை உயரம் | 795 மி.மீ |
ஒட்டுமொத்த நீளம் | 1989 மி.மீ |
ஒட்டுமொத்த அகலம் | 743 மி.மீ |
ஒட்டுமொத்த உயரம் | 1050 மி.மீ |
பேட்டரி | 12V 8Ah VRLA |
பஜாஜ் பல்சர் என்250 (Bajaj Pulsar New Update) டூயல் சேனல் ஏபிஎஸ் விலை ரூ. 1,78,750 (Bajaj Pulsar N250 Price) ஆகும்.
Bajaj Pulsar N250
பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் என் 250 பைக்கின் புதிய அப்டேட்டை ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியிட இருக்கிறது.
Product Brand: Bajaj
Product Currency: INR
Product Price: 178750
Product In-Stock: InStock
4.5
மேலும் படிக்க: Hero Passion Plus: ஹீரோ பேஷன் பிளஸ் பற்றிய தகவல்கள்..! |