Homeசெய்திகள்தமிழகத்தில் இனி இந்த பொருட்களுக்கு தடை..! அமைச்சர் அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் இனி இந்த பொருட்களுக்கு தடை..! அமைச்சர் அதிரடி உத்தரவு..!

தமிழகம் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து தான் வருகிறது. இந்த போதைப்பொருட்களால் பல குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளகிறது. மேலும் இதன் காரணமாக பலர் உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது. இவை அனைத்து மக்களுக்கு தெரிந்தாலும் இதனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த போதைப் பொருட்கள் பயன்பாட்டினால் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தான் இதற்கு முன்னர் தமிழகத்தில் குட்கா, புகையிலை போன்ற பொருட்களை விற்க தமிழக அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதன் பிறகு மீண்டும் தமிழகத்தில் போதைப் பொருட்களின் விற்பனை அதிகரிக்கத்தது.

இதனை விரைவில் தடுக்கவேண்டும் என்றும் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் இது போன்ற போதை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் பல உடல் பிரச்சனைகள் வருகிறது. அதிகபட்சமாக பலருக்கு புற்று நோய்களும் ஏற்படுகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் நடைபெற்ற 7-ம் ஆண்டு இளைஞர் நல விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியை அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் அண்டை மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டு வருகிறது என்றும் இதனை தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் போதைப் பொருட்கள் விற்பனையை தடை (Drugs Banned) செய்ய தமிழக அரசு பல முக்கிய நடவடிக்கைகள் வருவதாகவும் கூறினார்.

Drugs Banned

மேலும் இதனைத் தொடர்ந்து இன்னும் சில நாட்களில் குட்கா, பான் மசாலா, புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு தமிழகத்தில் நிரந்தர தடை (Drugs Banned in Tamilnadu) விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இவரின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. எனவே விரைவில் போதைப்பொருள் விற்பனைக்கு அரசு தடை விதிக்கும் என்று எதிர்ப்பார்க்ப்படுகிறது.

இதையும் படியுங்கள்: புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பு..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular