2024-ம் ஆண்டுக்கான IPL- Indian Premier League மேட்ச் பற்றிய அப்டேட்கள் வெளியாகத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக IPL ஏலம் (IPL Auction) குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
எல்லா ஆண்டும் கிரிகெட் திருவிழா என மக்களால் அழைக்கப்படும் IPL தொடர் BCCI (Board of Control for Cricket in India)-யால் வருடாவருடம் கோடைக்காலங்களில் நடத்தப்படுகிறது. இது ஒரு தொடராக நடத்தப்படுகிறது மற்றும் இந்த தொடர் 2 மாதங்கள் நடைபெறும்.
இத்தொடரில் மொத்தம் 10 அணிகள் போட்டியிடும், பத்து அணிகளில் மொத்தம் 250 வீரர்கள் கலந்துக்கொள்வர், இறுதியில் வெற்றிப்பெறும் அணிக்கு கோப்பை கிடைக்கும்.
தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் ஐபிஎல் தொடருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது என்றேக் கூறலாம். இந்த முறையும் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டில் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைப்பெற உள்ளது. எனவே ஐபிஎல் தொடர்கள் வெளிநாடுகளில் நடைப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பும் மக்களவை தேர்தலின் போது IPL தொடர்கள் வெளிநாடுகளில் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த வருடம் ஐபிஎல் தொடர்கள் இந்தியாவில்தான் நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளதாக IPL சேர்மேன் அருண் சிங் துமால் உறுதியாகக் கூறியுள்ளார்.
இப்போது இதன் முதற்கட்டமான IPL ஏலம் எப்போது நடைபெறும் என்ற கேள்வி அனைத்து ரசிகர்களின் மத்தியிலும் எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் ஐபிஎல் ஏலம் நடைப்பெற்றது. இந்த நிலையில் நவம்பர் 15-ம் தேதிக்குள் அணிகள் ரீடெய்ன் செய்யும் வீரர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது உலகக்கோப்பை நடைப்பெறுவதால், இந்த தொடர் முடிந்த பிறகு அணிகள் ரீடெய்ன் செய்யும் வீரர்களின் விவரங்களை அளிக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் IPL தொடருக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைப்பெறும் என்றும் ஆனால் இந்த முறை இந்தியாவில் இல்லாமல் துபாயில் நடைப்பெறும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதன் படி பெண்கள் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் டிசம்பர் 9-ம் தேதியும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 15 முதல் 19-ம் தேதிக்குள் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.