Homeஆன்மிகம்காலில் கருப்பு கயிறு கட்டி இருக்கீங்களா..! அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!

காலில் கருப்பு கயிறு கட்டி இருக்கீங்களா..! அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!

இந்திய அளவில் அதிக அளவிலான மக்களால் கடைப்பிடிக்கப்படும் வழக்கங்களில் ஒன்று தான் கை மற்றும் கால்களில் கயிறு கட்டுதல். இது பல காரணங்களுக்காக பல்வேறு தரப்பிலான மக்களால் கட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்போது இரு சாதாரணமான ஒன்றாகிவிட்டது.

ஆனால் நம் ஜோதிட சாஸ்திரப்படி கருப்பு கயிறு எல்லோருக்கும் அமைவதில்லை. எனவே எல்லோரும் அதனைப் பயன்படுத்தக்கூடாது. இந்த கருப்பு கயிற்றை பயன்படுத்த சில விதிகள் உள்ளது. இவற்றை நாம் பின்பற்றும் போது தான் நன்மைகள் நடக்கும். அவற்றை மீறும் போது வாழ்வில் சில எதிர்மறையான விளைவுகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது. அது குறித்து இப்பதிவில் (Black Thread in Leg Benefits In Tamil) பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரங்களின் படி கருப்பு கயிறு மகரம், துலாம், கும்பம் போன்ற ராசியினருக்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது (Benefits Of Wearing Black Thread in Leg). அதுமட்டுமின்றி இந்த மூன்று ராசிகளில் பிறந்தவர்கள் எந்தவித சந்தேகமும் இன்றி கருப்பு நிற ஆடைகள் மற்றும் கருப்பு கயிறுகளை அணியலாம். ஆனால் விருச்சிகம் மற்றும் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு கருப்பு நிறம் அந்த அளவிற்கு ஒத்துபோகாது.

இதனை ஜோதிட சாஸ்திரங்களின் படி செவ்வாய் இந்த இரண்டு ராசிகளும் கட்டுப்படுத்துகிறது. எனவே கருப்பு நிறம் அவர்களுக்கு உகந்தது அல்ல. இந்த ராசி காரர்கள் கருப்புக் கயிறு அணிவதால் மனது ஒருநிலையாக இருக்காது என்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கருப்பு கயிற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த தகவல்கள் (Black Thread Benefits) மற்றும் விதிகள் உங்களுக்குத் தெரிந்தால் அதைனை பின்பற்றவும்.

இந்த கயிற்றை கட்டுவதற்கு முன் நான்கு முடிச்சுகள் போடவும். மேலும் அந்த கயிற்றை ஒரு நல்ல நாளின் ஒரு நல்ல நேரத்தில் அதிலும் குறிப்பாக பிரம்மா காலத்தில் கட்டினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்று கூறுகின்றனர். மேலும் இந்த கயிற்றை கட்டுவதற்கு முன் முதலில் ருத்ர காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் அல்லது குல தெய்வத்தை நினைத்து கட்டலாம்.

Black Thread in Leg Benefits In Tamil

கருப்பு கயிறு கட்டுவதற்கு முன் கையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிற கயிறு கட்டி இருந்தால் கருப்பு கயிறு அணிய வேண்டாம். சனிக்கிழமையில் கருப்பு கயிறு அணிவது மிகவும் நல்லதும என்று கூறுகின்றனர். சனிக்கிழமை சனிக்கு உரியது என்பதாலும் அவருக்கு கருப்பு நிறம் பிடிக்கும் என்பதாலும் கருப்பு கயிறு அணிந்து ருத்ர காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் அந்த கறுப்புக் கயிற்றின் வலிமை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Panimaya Matha: புனித பனிமய மாதா கோயில் பவள விழா கொடியேற்றம்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular