இந்த பதிவில் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை (Bharathiyar History) பற்றி பார்க்க உள்ளோம். இந்திய விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய காலத்தில் தனது எழுத்துக்கள் மூலமாக போராடியவர் மகாகவி பாரதியார். இந்திய விடுதலைக்கு மட்டுமின்றி நாட்டில் உள்ள அடிமை மக்களின் விடுதலைக்காவும் இவர் எழுத்து மூலம் போராடி உள்ளார்.
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப் பெரிய கவிஞர் பாரதி ஆவார். பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு மற்றும் தமிழ் மொழி பெருமை போன்றவற்றை தனது எழுத்துக்கள் மூலம் புரட்சிகரமாக தெரிவித்த தேசியக்கவி பாரதியார் ஆவார். சுதந்திரப் பாடல்கள், தேசியப் பாடல்கள், தலைவர் வாழ்த்துகள், பெண் விடுதலை பாடல்கள், பக்திப் பாடல்கள் மற்றும் வசன கவிதைகள் போன்றவை பாரதியார் பாடிய பாடல்கள் ஆகும். இந்த பதிவில் மகாகவி பாரதியார் பற்றியும் (Bharathiyar History in Tamil) தெளிவாக பார்க்க உள்ளாம்.
Table of Contents
பாரதியார் பற்றிய சிறு குறிப்பு (Bharathiyar Biography in Tamil) – Bharathiyar History in Tamil
பெயர் | பாரதியார் |
இயற்பெயர் | சுப்பிரமணி (சுப்பையா) |
பெற்றோர் | சின்னச்சாமி ஐயர் – லட்சுமி அம்மாள் |
மனைவி | செல்லம்மாள் |
பிள்ளைகள் | தங்கம்மாள், சகுந்தலா |
ஊர் | எட்டயபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) |
பிறப்பு | 11.12.1882 |
மறைவு | 11.09.1921 |
முதன் முதலில் அச்சேறிய பாடல் | தனிமை இரக்கம் |
பாரதியாரின் பாடல்களை முதலில் அறிமுகம் செய்தவர் | பரலி சு. நெல்லையப்பர் |
பாரதி சங்கத்தை தோற்றுவித்தவர் | கல்கி |
பாரதி படத்தை வரைந்தவர் | ஆர்ய என்ற பாஷ்யம் |
பாரதியார் பிறப்பு (Bharathiyar Life History in Tamil)
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் என் ஊரில் சின்னச்சாமி ஐயர் மற்றும் லட்சுமி அம்மாளுக்கு மகனாக 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி பாரதியார் பிறந்தார். இவருக்கு இவர் பெற்றோர்கள் சுப்பிரமணி என்ற பெயர் வைத்தனர். வீட்டில் பாரதியாரை செல்லமாக சுப்பையா என அழைத்து வந்தனர்.
பாரதி பட்டத்திற்கான காரணம்
பாரதியார் ஐந்து வயது இருக்கும் போது அவருடைய தாயார் லட்சுமி அம்மாள் மறணம் அடைந்தார். அதன் பிறகு பாராதியாரின் தந்தை தான் அவருக்கு தமிழ் கற்பித்து வழர்த்தார். பாரதியார் அவரின் 7 வது வயதில் கவிதை எழுதும் திறமை பெற்றார். அவரின் 11 வது வயதில் கவிதை பாடும் திறன் பெற்றார்.
சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றதால் சுப்பையாவிற்கு எட்டயபுர சமஸ்தான புலவர்கள் ”பாரதி” என்ற பட்டம் கொடுத்தனர். அறிவில் சிறந்த இல்லறத்தார்க்குக் கொடுக்கப்படும் பட்டம் தான் பாரதி ஆகும். பாரதி என்பது கலைமகளின் வேறு பெயர் ஆகும். இதன் காரணமாகவே இவர் பெயர் சுப்பிரமணிய பாரதியார் ஆகும்.
திருமண வாழ்க்கை
1897 ஆம் ஆண்டு செல்லம்மாள் என்பவருடன் பாரதிக்கு பால்ய திருமணம் நடைபற்றது. அப்போது பாரதியாருக்கு வயது 14 ஆகும். செல்லம்மாளின் வயது 7 ஆகும். இவர்களுக்கு தங்கம்மாள், சகுந்தலா என்ற இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.
பாரதியாரின் சிறப்பு பெயர்கள் மற்றும் பாரதியின் சிறப்புகள்
தேசியக்கவி |
மகாகவி |
காளிதாசன் |
சக்திதாசன் |
சாவித்திரி |
ஓர் உத்தம தேசாபிமானி |
நித்ய தீரர் |
ஷெல்லிதாசன் |
பாட்டுக்கொரு புலவன் பாரதி |
நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா |
தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி |
போன்றவை பாதியாரின் சிறப்பு பெயர்கள் ஆகும். இந்த சிறப்பு பெயர்கள் எல்லாம் இவரின் கவி பாடும் புலமை கண்டு வழங்கப்பட்டது.
- ஆங்கில கவிஞர் ஷெல்லதாசன் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாக பாரதியார் தன்னை தானே ஷெல்லதாசன் என அழைத்துக்கொண்டார்.
- மகாகவி என்ற பட்டம் பொடுத்தவர் வ.ரா. (ராமசாமி ஜயங்கார்)
- பாரதியார் புதுக்கவிதைகளின் முன்னோடி ஆவார். எனவே இவரை முன்னறி புலவர் எனப்பட்டார். இவரின் புதுக்கவிதைகளின் முன்னோடி வால்ட் விட்மன் ஆவார்.
- தம் பாடல்களுக்குத்தானே மெட்டமைத்து பாடும் திறன் கொண்ட கவிஞர் பாரதி.
- கவிதைகளில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் பாரதி ஆவார்.
- வசனகவிதையை தமிழில் அறிமுகப்படுத்தியவர் பாரதி. மேலும் வசனகவிதையில் புதுக்கவிதை என்ற வடிவம் உருவாவதற்குக் காரணமாக இருந்தார்.
பாரதியாரின் விடுதலை உணர்வு
இந்திய விடுதலைக்காக சிலர் ஆயுதம் ஏந்தினர், சிலர் அகிம்சை முறையில் போராடினர் ஆனால் பாரதியே தனது எழுத்துக்கள் மூலம் போராடினர். விடுதலை உனர்வை தூண்டும் புரட்சிக்கரமான பாடல்கயை எழுதினார் பாரதியார். தனது இதழ்கள் மூலம் எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதி விடுதலை உணர்வை அனைவர் மனதிலும் விதைத்தார் பாரதியார்.
கல்லூரி படிப்பிற்காக காசி சென்றிருந்த பாரதியார். அங்க இந்திய விடுதலை வீரர்கள் பேச்சுகளை கேட்டு பாரதியாருக்கு ஆங்கிலேயர்கள் மீது கோபம் வந்தது. அதன் பிறகு தன்னை முழுமையாக விடுதலை போராட்டத்தில் ஈடுபடுத்தி கொண்டார் பாரதி. இதன் விளைவாகவே மிகபெரிய மீசையையும், தலையில் முண்டாசு அணியும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டார் பாரதியார்.
கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் பிள்ளை போன்ற விடுதலை போராட்ட தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு பாரதியாருக்கு ஏற்பட்டது. அதன் பிறகு தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடைபெற்ற மகா சபை கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. அங்கு சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியை சந்திக்கும் வாய்ப்பு மகாகவிக்கு கிடைத்தது. நிவேதிதா தேவியை தனது ஞானகுருவாக ஏற்றுக்கொண்டார் பாரதியார்.
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்.
இது போன்ற பாரதியார் எழுதிய பாடல்கள் காட்டு தீ போல் பரவி தமிழர்களின் விடுதலை உணர்வை தூண்டியது.
பாரதியாரின் பணி
பாரதியார் இந்தியாவில்ன விடுதலைக்கா ஆங்கிலயர்களை எதிர்த்து பல் இதழ்களில் ஆசிரியரை பணியாறிற் உள்ளார். மேலும சில இதழ்களை பாதரியார் நடத்தி உள்ளார்.
ஆண்டு | இதழ்கள் | பணி |
1904 | சுதேசமித்திரன் | துணையாசிரியர் பணி |
1905 | சக்கரவர்த்தினி | பாரதி தொடங்கினார் |
1907 | இந்தியா, விஜயா | ஆசிரியர் பணி |
1908 | கர்மயோகி. பாலகாரதி (ஆங்கிலம்) | பாரதி நடத்திய இதழ்கள் |
- மேலும் 1904 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும் பாரதியார் பணியாற்றினார். இவர் பணியாற்றியதற்கான ஆவணங்கள் இன்றும் அந்த பள்ளியில் உள்ளது.
பாரதி புலமை பெற்ற மொழிகள்
பாரதியார் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் புலமை பெற்றவர். பாரதியார் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், வங்காள, பிரெஞ்சு, அரபு உள்ளிட்ட 14 மொழிகள் தெரியும்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
என்று பாரதி அவர் அறிந்த மொழிகளில் தமிழ் மொழி தான் மிக சிறந்த மொழி என புகழ்ந்து எழுதி உள்ளார் மகாகவி. மேலும் பல புரட்சிகரமான வாசகங்களையும் பாரதியார் எழுதியுள்ளார்.
பாரதியார் வாசகங்கள் (Bharathiyar Quotes Tamil)
தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா
இது போன்ற புரட்சிகரமான மேற்கோள்களையும் பாரதியார் எழுதியுள்ளார். இதனை வாசிக்கும் அனைவருக்கும் வீர உணர்வை தூண்டும் வகையில் இந்த வாசகங்கள் அமைந்துள்ளன.
நான் வீழ்வே னென்று
நினைத் தாயோ?
இது போன்று பல புரட்சிகரமான மேற்போல்களை பாரதியார் (Bharathiyar Quotes Tamil) எழுதியுள்ளார். இவை அனைத்தும் விடுதலை போராட்டத்தில் மக்களை ஈடுபடுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
சொல்வதை தெளிந்து சொல்
செய்வதை துணிந்து செய்
பாரதியார் படைப்புகள்
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- பாஞ்சாலி சபதம்
- தேசிய கீதங்கள்
- பாப்பா பாட்டு
- புதிய ஆத்திசூடி
- சுயசரிதை (பாரதியார்)
- சின்னஞ்சிறு கிளியே
- பாரதி அறுபத்தாறு
- ஞானப் பாடல்கள்
- தோத்திரப் பாடல்கள்
- விடுதலைப் பாடல்கள்
- விநாயகர் நான்மணிமாலை
- பாரதியார் பகவத் கீதை (பேருரை)
- பதஞ்சலியோக சூத்திரம்
- நவதந்திரக் கதைகள் இந்தியா
- உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
- ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
- ஆறில் ஒரு பங்கு
- ஞான ரதம்
- பகவத் கீதை
- சந்திரிகையின் கதை
- பொன் வால் நரி
- இவை அனைத்தும் பாரதியார் படைப்புகள் ஆகும். இவற்றில் பாரதியார் இயற்றிய முப்பெரும் பாடல்கள் என்ற சிறப்பை பெற்றது ”கண்ணன் பாட்டு, குயில் பாட்டு மற்றும் பாஞ்சாலி சபதம்” ஆகும்.
- பாஞசாலி சபதம் கண்ட காவியம் என சிறப்பு பெயரில் அழைக்கப்படுகிறது.
- 1908 ஆம் ஆண்டு ஸ்வதேச கீதங்கள் என்ற நூல் தான் முதன் முதலில் அச்சில் ஏறிய பாரதியாரின் நூல் ஆகும்.
- பாரதியார் பாடல்களை முதன் முதலில் அறிமுகம் செய்யதவர் பரலி. சு. செல்லையப்பர் ஆவார்.
- பாரதியாரின் பாடல்களை முதன் முதலில் வெளியிட்டவர் – வி.கிருஷணசாமி ஐயர்
- பாரதியார் பகவத் கீதையை தமிழில் மொழி பெயர்த்தார்.
- பக்கிம் சந்திரரின் வந்தே மாதரம் என்ற பாடலை தமிழில் மொழிபெயர்த்து சக்கரவர்த்தினி இதழில் வெளியிட்டார் பாரதி.
பாரதியார் மறைவு
திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் யானை பாரதியாரை தாக்கியது. யானை தூக்கி எரிந்ததால் பாரதியாருக்கு மன அதிர்ச்சி ஏற்பட்டது. இதன் காரணமாக சிறு நாட்கள் பாரதியார் மருத்து சிகிச்சைகள் பெற்று வந்தார். கடுமையான வயிற்றுப்போக்கு, வேறு சில நோய்களும் சேர்ந்து கொண்டதால் பாரதியார் உடல்நிலை பலவீனமாடைந்தது. 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி தனது 39 ஆவது வயதில் பாரதியார் மரணம் அடைந்தார்.
இந்திய விடுதலைக்கா போராடிய பாரதியார் 39 வயதில் இந்த உலகை விட்டு மறைந்தாலும். அவரின் கவிதைகள் மூலமாக இன்றவளும் வாழ்ந்து வருகிறார். இந்தியாவின் விடுதலை தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற நாட்களில் பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடம் அணிவது, பாரதியார் ஓவியங்கள் வரைதல் போன்ற போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
மகாகவி போன்று இதற்கு முன்பு யாரும் பிறந்ததும் இல்லை இனி பிறக்க போவதும் இல்லை. அந்த அளவிற்கு பாரதியின் புரச்சிகரமான வாசகங்கள் அனைவர் மனதிலும் நிலைத்து நிற்கின்றன. அவர் வாழ்ந்த காலத்தில் அவரை கவனிக்காத கண்கள் விட லட்சக்கணக்கான இதயங்கள் அவரின் பெயரை தற்போது உரைக்கின்றன.
Bharathiyar History
மேலும் படிக்க: Kamarajar History in Tamil..! காமராஜர் வாழ்க்கை வரலாறு..! |
1. பாரதி எழுதிய முதல் கவிதை நூல் எது?
பாரதியார் எழுதிய தனிமை இரக்கம் என்ற கவிதை நூல் தான் முதல் முதலில் அச்சில் ஏறிய நூல் ஆகும். விவேக பாநு என்ற இதழில் 1902 ஆம் ஆண்டு இது வெளியானது.
2. பாரதியார் பூணூலை யாருக்கு அணிவித்தார்?
பாரதியார் தன்னுடைய பூணூலை கனகலிங்கம் என்வருக்கு அணிவித்தார்
3. பாரதியார் எழுதிய முப்பெரும் பாடல்கள் எவை
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு மற்றும் பாஞ்சாலி சபதம் தான் பாரதியார் எழுதிய முப்பெரும் பாடல்கள் ஆகும்.