Homeசினிமாதிடீரென திருமணம் செய்த பிக்பாஸ் பாலா..! பொண்ணு யாரு?

திடீரென திருமணம் செய்த பிக்பாஸ் பாலா..! பொண்ணு யாரு?

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிரபல நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இது நிகழ்ச்சிக்கு உள்ள ரசிகர்கள் பற்றி செல்ல தேவையில்லை அனைவருக்கும் தெரியும். இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளனர்.

ஆனால் சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பெரிய அளவில் பேசப்பட்டாலும் அதற்குப் பின் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றனர். எனினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு முறை பாலாஜி முருகதாஸ் (Bigg Boss Balaji Murugadoss) கலந்து கொண்டார். இதன் மூலம் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளது.

பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது இவருக்கு ரசிகர்கள் அதிகம். இதன் காரணமாக இவர் பிக் பாஸ் ரன்னராக தேர்வானார். அதற்கு பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அதில் டைட்டில் வின்னர் ஆனார். இந்நிலையில் தான் தற்போது தன் சமூக வலைதள பக்கத்தில் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை (Bigg Boss Bala Marriage Photos) வெளியிட்டு இருக்கிறார்.

அதோடு மணப்பெண் முகத்தை முழுமையாக தெரியாத படி மறைத்து இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். எனவே பாலாஜி முருகதாஸுக்கு திருமணம் (Bigg Boss Bala Marriage) முடிந்து விட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும் பாலாஜி முருகதாஸ் இந்த புகைப்படம் குறித்து எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Balaji Murugadoss
இதையும் படியுங்கள்: சுமார் 16500 கோடி சொத்துகள் வைத்திருக்கும் நடிகர்..! யார் அவர்?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular