இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் (Gautam Gambhir) கடந்த 2019-ம் ஆண்டு பாஜக கட்சியில் இணைத்தார். மேலும் இவர் பிரதமர் மோடியின் கொள்கைகளை பார்த்து பாஜகவில் இணைந்ததாக கூறி இருந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் அரசியல் கட்சியில் சேர்ந்தது அப்போது சமூக வளைதலங்களில் வைரலானது.
அதுமட்டுமின்றி அவர் கட்சியில் சேர்ந்த உடனே டெல்லியில் தேர்தலில் போட்டியிட்டார். இவர் பாஜக கட்சியின் சார்பாக லோக்சபா தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். அப்போது இவர் காங்கிரஸ் கட்சியின் அரவிந்தர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி ஆகியோரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டார்.
ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கவுதம் கம்பீர் 6.96 லட்சம் வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றிபெற்றார். அவர் எதிர்த்து நின்ற அரவிந்தர் 3.04 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றார். மேலும் அதிஷி வெறும் 2 லட்சம் வாக்குகள்தான் பெற்றார். இந்த வெற்றியின் காரணமாக கவுதம் கம்பீர் முதல்முறையாக எம்.பி (BJP MP Gautam Gambhir) ஆகியுள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது பாஜக எம்.பி கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் அரசியல் தொடர்பான பணிகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அவர்களுக்கு டெல்லி கிழக்கு தொகுதி எம்பியான கவுதம் கம்பீர் (MP Gautam Gambhir) கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். இவர் விரைவில் தொடங்கவுள்ள IPL தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதால் அந்த பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: பூமியை விட 3.7 மடங்கு அதிகம் தண்ணீர் உள்ள இளம் நட்சத்திரம் கண்டுபிடிப்பு..! |