Homeஆன்மிகம்Erumbu Palangal: உங்கள் வீட்டில் கருப்பு எறும்பு வருகிறதா? ஜோதிடம் சொல்லும் எறும்பு சாஸ்திரம்..!

Erumbu Palangal: உங்கள் வீட்டில் கருப்பு எறும்பு வருகிறதா? ஜோதிடம் சொல்லும் எறும்பு சாஸ்திரம்..!

Erumbu Palangal: நமது ஜோதிட சாஸ்திரத்தின் படி நம் முன்னோர்கள், சில சாஸ்திரங்களை வகுத்து வைத்துள்ளன. அதன்படி பல்லி விழுந்தால் என்ன பலன், பல்லி சப்தமிட்டால் என்ன பலன், காகம் கரைந்தால் என்ன பலன், பஞ்ச பட்சி பலன் என்று நம்மை சுற்றியுள்ள விலங்குகள், பூச்சிகள், ஊர்வன என அனைத்து உயிரினங்களுக்கும் உரிய சாஸ்திரங்களை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.

நம் அன்றாட வாழ்கையில் காலை முதல் இரவு உறங்க செல்லும் வரை, நாம் பார்க்கும் விடயங்கள் மூலம் நமது வாழ்க்கையில் என்ன நடக்க போகிறது என எதிர்க்காலத்தை குறிக்கும் என்று கருதப்படுகிறது. உதாரணமாக காலை எழுந்தவுடன் கழுதையோ, நரியோ கண்டால் யோகம் என்றும், அதுவே பூனை போன்றவற்றை கண்டால் தீமை எனவும் நம்பப்படுகிறது.

வீட்டின் அருகே காகம் கரைந்தால் அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அது கரையும் திசையை வைத்து அதனால் ஏற்பட போகும் விளைவுகளை நாம் முன்னதாகவே அறிந்துக்கொள்ளலாம். அந்த வகையில் நாம் இப்பொழுது நம் வீட்டில் அன்றாட பார்க்கும் ஒரு பூச்சி தான் எறும்பு. சுறுசுறுப்பான ஒரு உயிரினம் என்றால் அது எறும்பு தான். அந்த எறும்பை நம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ கண்டால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

கருப்பு எறும்பு

ஜோதிட சாஸ்திரத்தின் படி நீங்கள் இருக்கும் இடம் சுற்றி அதாவது, வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கருப்பு எறும்பை (Erumbu Palangal) கண்டால் அது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுவே சிவப்பு எறும்பை கண்டால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக சிவப்பு எறும்பு (Sivappu erumbu veetil vanthal enna palan) கடிக்கும் குணம் கொண்டது. ஆனால், கருப்பு எறும்பு கடிக்காது. கருப்பு எறும்புகள் பொதுவாக மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் நம் வீட்டில் சிவப்பு எறும்புகள் தென்படும் அளவிற்கு கருப்பு எறும்புகள் தென்படாது. கருப்பு எறும்பை (karuppu erumbu veetil vanthal enna palan) கண்டால் பணம் புழங்கும் என நம்பப்படுகிறது.

 erumbu veetil vanthal enna palan

எந்த திசையில் கருப்பு எறும்பு வந்தால் நன்மை

பொதுவாக கருப்பு எறும்பு சுபமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. கருப்பு எறும்பை கண்டால் பதவி உயர்வு, நிதி நிலை முன்னேற்றம், பிரச்சனை முடிவு என அனைத்தும் மங்களகரமகா நடக்கும்.

  • வீட்டின் கிழக்கு திசையில் கருப்பு எறும்பு தோன்றினால் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
  • வடக்கு திசையில் கரும்பு எறும்பு தோன்றினால் பணவரவு ஏற்படும்.
  • மேற்கு திசையில் கருப்பு எறும்பு தோன்றினால் நன்மையான செய்திகள் கிடைக்கும்.
  • தெற்கு திசையில் கருப்பு எறும்பு தோன்றினால் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் படிக்க: இதை மட்டும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.. உங்கள் கஷ்டங்கள் எல்லாம் மாறிவிடும்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular