தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் அவரை முழுமையாக ஈடுபடுத்தி வந்தார். தற்போது கமல் என்ன பேசினாலும் அது ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
முக்கியமாக அதுவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு அவர் கொடுத்த ரெட் கார்டு. அதன் பின் அவர் அதிக அளவு ட்ரோல் செய்யப்பட்டார். அவர் செய்த இந்த செயல் மிகவும் தவறு என்றும், நியாயமாக அவர் நடந்துக்கொள்ளவில்லை என்றும் பல தரப்பினரிடம் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் வந்தன. அதன்பின் அவர் அதனை சமாளிக்க அடுத்த வார எபிசோடுகளை கையாள மிகவும் சிரமப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியை அனைவரும் ட்ரோல் செய்த நிலையில் பரிதாபங்கள் கோபி போன்றோர் இந்நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கும் அவரையும் பல விதங்களில் கேளி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான கமலை ப்ளூ சட்டை மாறன் (Blue Sattai Maran) கடுமையாக விமர்சித்துயுள்ளார். காரணம் மிக்ஜாம் புயல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பும், அதற்கு முன் பேரிடர் காலங்களில் அவர் பதிவிட்ட கருத்துகளை பகிர்ந்து கேள்வியெழுப்பி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் 2015-ம் ஆண்டு வந்தது வெள்ளம் இல்லை, இப்போ வந்திருப்பது தான் இயற்கை வெள்ளம் என பேசிய நிலையில், தற்போது கமல் கூறியிருப்பது 2015-ல் வந்திருப்பது சிற்றிடர், இப்போது வந்திருப்பது பேரிடர் என்றும் இது குறை சொல்லும் நேரம் இல்லை, உதவி செய்ய வேண்டிய நேரம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் அப்போ அதிமுக ஆட்சியில் இருந்த போது “கருணை மழைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை, கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை வடிகால்கள் வாரப்படவில்லை” என கேள்வியெழுப்பிருந்தார்.
தற்போது அவர் திமுக அரசுடன் கூட்டணி வைத்த நிலையில் தனது நீதி மையத்தில் இருந்து விலகி தற்போது ஜால்ரா அடிக்கிறார் என்று கமலை விளாசியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.