Homeசினிமாஅமெரிக்காவில் வசூல் சாதனை படைத்த மஞ்சுமெல் பாய்ஸ்..! இத்தனை கோடியா?

அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்த மஞ்சுமெல் பாய்ஸ்..! இத்தனை கோடியா?

சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இன்றுவரை திரையரங்குகளில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த திரைப்படம் ஒரு மலையாள திரைப்படம் ஆகும். எனினும் தமிழ்நாடு உள்ளிட்ட பல பகுதிகளில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களும் வருகிறது.

இந்த படமானது இதற்கு முன் உண்மையாகவே நடந்த ஒரு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை இயக்குனர் சிதம்பரம் இயக்கியுள்ளார். இப்படத்தில் 1991-ம் ஆண்டு வெளியான குணா படத்தை இணைத்து இயக்கியுள்ளார் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. இந்த படத்தின் வசூல் தற்போது நூறு கோடியை கடந்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலின்படி அமெரிக்காவில் இந்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை (Manjummel Boys Collection In America) படைத்துள்ளது. இதுக்குறித்து இப்போது பார்க்கலாம். இதுவரை பல மலையாள திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு அனைத்து படங்களுக்கும் கிடைத்தது இல்லை என்று தான் கூறவேண்டும்.

அந்த அளவுக்கு ஆரம்பம் முதலே இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தான் தற்போது இப்படம் அமெரிக்காவிலும் சாதனையை படைத்துள்ளது. இந்த படமானது அமெரிக்காவில் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூல் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தனை ஆண்டுகளில் மலையாள படம் ஒன்று அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூல் செய்வது என்பது மிகப்பெரிய விஷயம். இதற்கு முன்னர் பல முன்னனி நடிகர்களில் படங்கள் வெளியாகிதான் இருக்கிறது. எனினும் இந்த படம் செய்துள்ள வசூலை எந்த படமும் செய்யவில்லை. மேலும் இப்படத்தில் உள்ள அனைவரும் இளம் நடிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Manjummel Boys Box Office Collection

மேலும் இப்படமானது கடந்த வாரம் வசூலில் நூறு கோடியை தாண்டியது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் வசூல் (Manjummel Boys Box Office Collection) 150 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் செளியாகியுள்ளது. இப்படம் அமெரிக்காவில் செய்துள்ள வசூல் (Manjummel Boys Movie Vasool) மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: Manjummel Boys Box Office Collection: படத்தின் பட்ஜெட்டை விட பல மடங்கு வசூல் செய்த திரைப்படம்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular