தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நடிகர் தான் சூர்யா. இந்த நிலையில் தான் தற்போது கங்குவா என்னும் படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக புதிய கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. இந்த வருடத்தின் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் இந்த கங்குவா படமும் ஒன்று.
இந்த கங்குவா படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நடராஜன், ஜெகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ரெடிங் கிங்ஸ்லீ, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடிதது வருகிறது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்கிறது. மேலும் இப்படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
இந்த படத்தில் சூர்யா 6 கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்த படம் உள்ளது. இந்த படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் தற்போது இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த இரண்டு பாகங்களில் ஷூட்டிங் வேலைகளும் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்துக்கு இதுவரை மொத்தம் 350 கோடி ரூபாய் பட்ஜெட் செலவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: மலையாள திரையுலகில் அறிமுகமாகும் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா… |