இந்தியாவில் 18 வது மக்களவை தேர்தல் (Parliment Election 2024) வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறறு முடிவைந்துள்ளது. இரண்டாம் கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை (அதாவது 26.04.2024 ஆம் தேதி) 88 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
எனவே இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் அங்கு போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 1 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை (Therthal Prachara Timing) வெளியிட்டுள்ளார்.
வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளா – 20, கருநாடகம் – 14, ராஜஸ்தான் – 13, மகாராட்டிரம் – 8, உத்தரப் பிரதேசம் – 8, மத்தியப் பிரதேசம் – 7, அசாம் – 5, பீகார் – 5, மேற்கு வங்காளம் – 3, மேகாலயா – 2, மேலும் சத்தீஸ்கர், மணிப்பூர், திரிபுரா, சம்மு காசுமீர் போன்ற தொகுதிகளில் தலா 1 என மொத்தம் 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
வெள்ளிகிழமை (26.04.2024) மக்களவை தேர்தல் மேலுள்ள 89 தொகுதிகளில் நடைபெற இருப்பதால் அந்த பகுதிகளில் எல்லாம் இன்று (24.04.2024) மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைய இருக்கிறது (Prachara Timing). இன்று மாலைக்கு பிறகு அனைத்து கட்சிகளும் அவர்களின் தேர்தல் பிரச்சாரம் நிறைவு செய்ய வேண்டும் எனவும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பிரச்சார விளம்பரங்களை ஒளிபரப்ப கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை மீறி இன்று மாலைக்கு பிறகு பிரச்சாரம் செய்தாலோ, தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் (Lok Sabha Election Prachara Timing) ஒளி பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விட்டாச்சு லீவு.. நாளை முதல் கோடை விடுமுறை அறிவிப்பு..! |