சினிமா

Captain Miller Box Office Collection: அயலானை விட டபுள் வசூல்..! இத்தனை கோடியா..!

தமிழ் திரையுலகில் சில நடிகர்களுக்கு மட்டும் தான் எல்லா கதாபாத்திரமும் பொருந்தும். அதுபோல உள்ள நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். இவருக்கு பள்ளி மாணவர் கதாபாத்திரம் என்றாலும் இளைஞர், தந்தை என எல்லா கதாபாத்திரத்திற்கும் பொருந்தும். இவர் தமிழ் சினிமாவில் முக்கிய மற்றும் முன்னனி நடிகராகவும் உள்ளார். மேலும் இவருடைய நடிப்புக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதற்கு ஏற்றார் போல் இவரது படங்களும் அவரது ரசிகர்களை திருப்தி படுத்தும் விதத்தில் உள்ளது. இவரது நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு கூட கேப்டன் மில்லர் என்னும் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் 12-ம் தேதி (Captain Miller Release Date) வெளியானது. மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

இப்படத்தினை இயக்குநர் (Captain Miller Director) அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் மற்றும் கதாநாயகியாக பிரியங்கா மேகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், நிவேதிதா சதி, எட்வர்ட் சொன்னன்பாலிக், சுந்தீப் கிஷன், நாசர், ஜான் கோக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தினை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஆக்சன் கலந்த அதிரடி படமாக உள்ளது. மேலும் இந்த படத்தை ஆக்சன் பிரியர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் இப்படம் ஆரம்பம் முதலே நல்ல கதையுடனும் பல உணர்வுபூர்வமான தருணங்களுடனும் உள்ளது. மேலும் இப்படத்தின் பல காட்சிகள் நம்மை சிலிர்க்க வைக்கும் விதமாகவும் உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதனை இப்பதிவில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: Salaar Movie: OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

கேப்டன் மில்லர் வசூல் (Captain Miller Collection)

கடந்த 12-ம் தேதி வெளியான இந்த திரைப்படம் இன்று வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 7 நாட்களில் 60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் இப்படம் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. மேலும் படத்திற்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் சென்னையில் மட்டும் இதுவரை ரூ.2.79 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 50 முதல் 60 கோடி வரை தான். படம் வெளியான சில நாட்களிலே பட்ஜெட் தொகையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: Ayalaan Box Office: வசூலில் பட்டைய கிளப்பும் அயலான்..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago