Carrot Burfi Recipe: காய் கறிகள் என்றால் பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடிக்காது. அவ்வாறு காய் சாப்பிட அடம் பிடிக்கும் உங்கள் வீட்டு குழந்தைகளை சாப்பிட வைக்க ஒரு எளிய வழி. கேரட் பர்பி செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள். இனிப்புகள் என்றால் குழந்தைகளுக்கு பிடிக்கும் எனவே கேரட்டை கொண்டு பர்பி செய்து கொடுங்கள் (Carrot Burfi Recipe in Tamil).
நாம் அனைவருக்கும் காய்கறிகளை விட இனிப்புகள் சாப்பிட தான் பிடிக்கும். குழந்தைகளை கேரட் சாப்பிட வைக்க ஒரு எளிய வழியாக இந்த கேரட் பர்பி செய்து கொடுங்கள். கேரட் மூலம் செய்யப்படும் இந்த இனிப்பானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த கேரட் பர்பி செய்வது எப்படி (Carrot Burfi Seivathu Eppadi) என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Table of Contents
கேரட் பர்பி செய்வது எப்படி (Carrot Burfi Recipe in Tamil)
கேரட் என்பது ஒரு வேர் காய் ஆகும். கேரட் பூமியின் அடியில் முழைக்கும் காய் என்பதால் கேரட் வேர் காய் என கூறப்படுகிறது. பொருவாக கேரட் ஆரஞ்சு நிறத்தில் கொண்டது. இருப்பினும் சில இடங்களில் ஊதா, கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் போன்ற வகை வகைகள் கேரட்களும் உள்ளன. இது போன்ற கேரட்கள் எல்லாம் ஐரோப்பா மற்றும் தென்மேற்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது ஆகும்.
நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் கேரட் ஆரஞ்சு நிறம் கொண்டது. இந்த கேரட்டை மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பான கேரட் பர்பி செய்வது எப்படி என்பதை (How to Mage Carrot Burfi in Tamil) இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் (Carrot Burfi Recipe Ingredients)
- கேரட் துருவல் – 1 கப்
- பாதாம் – 5
- முந்திரி – 5
- ஏலக்காய் – 2
- சர்க்கரை – 1/2 கப்
- மில்க்மெய்ட் – 1/4 கப்
- பால் – 3 டேபுள் ஸ்பூன்
- நெய் – தேவையான அளவு
கேரட் பர்பி செய்முறை (Carrot Burfi Seivathu Eppadi)
- முதலில் கேரட்டை எடுத்து நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். அதன் பிறகு கேரட்டை துருவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்ற வேண்டும்.
- நெய் நன்றாக சூடான பிறகு துருவி வைத்திருக்கும் கேரட்டை சேர்த்து வதக்க வேண்டும்.
- கேரட் வதங்கிய பிறகு அதனுடன் பால் சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு சர்க்கரை, மில்க் மெய்ட், ஏலக்காய், முந்திரி, பாதாம் ஆகியவற்றை சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி வேண்டும்.
- ஒரு தட்டில் சிறிது நெய் அதில் தயார் செய்த கேரட் பர்பியை கொட்டி தட்டையாக தட்டி தேவையான அளவில் வெட்டி கொள்ள வேண்டும். அதன் பிறகு சுவையான கேரட் பர்பி தயார்.
Carrot Burfi Recipe: உங்கள் வீட்டில் கேரட் இருக்கா? அப்போ இந்த ஸ்வீட் செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள்…
கேரட்டை மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் கேரட் பர்பி செய்வது எப்படி என்பதை (Carrot Burfi Recipe) இந்த பதிவில் பார்க்கலாம்.
Type: Dessert
Keywords: Carrot Burfi, Carrot Burfi Recipe
Recipe Yield: 5
Preparation Time: PT5M
Cooking Time: PT15M
Total Time: PT20M
Recipe Ingredients:
- Grated carrot – 1 cup
- Almonds – 5
- Cashew – 5
- Cardamom – 2
- Sugar – 1/2 cup
- Milkmaid – 1/4 cup
- Milk – 3 Tablespoon
- Ghee – required quantity
Recipe Instructions: முதலில் கேரட்டை எடுத்து நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். அதன் பிறகு கேரட்டை துருவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்ற வேண்டும். நெய் நன்றாக சூடான பிறகு துருவி வைத்திருக்கும் கேரட்டை சேர்த்து வதக்க வேண்டும். கேரட் வதங்கிய பிறகு அதனுடன் பால் சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சர்க்கரை, மில்க் மெய்ட், ஏலக்காய், முந்திரி, பாதாம் ஆகியவற்றை சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி வேண்டும். ஒரு தட்டில் சிறிது நெய் அதில் தயார் செய்த கேரட் பர்பியை கொட்டி தட்டையாக தட்டி தேவையான அளவில் வெட்டி கொள்ள வேண்டும். அதன் பிறகு சுவையான கேரட் பர்பி தயார்.
4.5
மேலும் படிக்க: Rose Milk Rasgulla Recipe: ரோஸ் மில்க் ரசகுல்லா சாப்பிட்டு இருக்கீங்களா? ஈசியாக வீட்டிலேயே செய்வது எப்படி..! |