Homeசெய்திகள்தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு..! மத்திய அரசு அதிரடி..!

தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு..! மத்திய அரசு அதிரடி..!

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமரின் ரோடு ஷோ (Covai Road Show Issue) நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துக்கொண்டனர். ஆனால் இந்த பேரணியில் பள்ளியில் பயிலும் மாணவர்களை பங்கேற்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இது போன்ற தேர்தல் பிரசாரங்களில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைக்க கூடாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆனால் அன்மையில் கோவை சாய்பாபாகோயில் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ (Covai Road Show Issue in Tamil) நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தான் இந்த நிகழ்ச்சிக்கு கூட்டம் காண்பிக்க வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்துள்ளனர்.

இந்த பிரச்சாரம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் இருந்து மாணவர்களை பள்ளி சீருடையுடன் அழைத்து வந்ததும் மேலும் அவர்களுடன் ஆசிரியர்களும் சேர்ந்து கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி இதற்கு காரணமாக இருந்த தேர்தல் அதிகாரிகள் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், இணை கமிஷனர் மற்றும் தொழிலாளர் துறையினர் மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இந்த பிரச்சனை காரணமாக சம்பந்தப்பட்ட அரசு பள்ளி முதல்வருக்கு ரோட் ஷோ வில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டது ஏன் என்ற விளக்கம் அளிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார்.

Covai Road Show Issue in Tamil

இந்நிலையில் தான் தற்போது பிரதமர் ரோடு ஷோவில் (Roadshow Issue in Covai) மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் பங்கேற்றது தொடர்பாக 3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. மேலும் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்த மூன்று தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு (Case on Covai Private Schools) செய்யபப்ட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: முதல் முறையாக மனித மூளைக்குள் சிப்..! அதையும் விட்டு வைக்கலையா?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular