இந்தியாவில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியுள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா (Kudi urimai sattam thiruththa masodha in tamil) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.
1955- ஆண்டு முதல் அமலில் இருந்த குடியுரிமை சட்டத் திருத்த (Citizenship Amendment Act) மசோதாவை மத்தியில் உள்ள பாஜக அரசு மீண்டும் கடந்த 2019-ல் சில மாற்றங்களை செய்தது. இந்த சட்டத்தின் படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு தஞ்சம் தேடி வரும் இந்துக்கள், ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குவதே இதன் நோக்கமாகும். இதில் 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் தஞ்சம் அடைந்த, மேலே கூறப்பட்டுள்ள மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இதில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை.
நாடு முழுவதும் இந்த மசோதாவிற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது. அதிலும் முக்கியமாக முஸ்லீம் நாடுகளில் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மற்ற மதங்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்கும் போது ஏன் இஸ்லாமியர்களுக்கு மட்டும் வழங்கவில்லை, முஸ்லீங்களை இந்தியா புறக்கணிக்கிறது என்று பல்வேறு தரப்பினர்களும் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த போராட்டங்களின் போது 100-ம் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுதுவதை மத்திய அரசு ஒத்தி வைத்திருந்தது. அதுமட்டமல்லாமல் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு போன்ற காரணங்களால் இந்த சட்டம் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.
சிஏஏ வலைதளம் (CAA official website)
இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இந்திய அரசு இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது. இந்திய குடியிரிமைக்ககு விண்ணப்பிப்பவர்கள் முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாக (CAA official website india) மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் போர்டல் மார்ச் 12 காலை முதல் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியுரிமைக்கு தகுதி வாய்ந்தவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி indiancitizenshiponline.nic.in விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் CAA-2019 என்ற மொபைல் செயலியை விரைவில் அறிமுகப்படுத்த போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தகுடியுரிமை பெற 2014- ஆம் ஆண்டுக்கு பின்னர் குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும். அதாவது 2014 முதல் 2024 வரை உள்ள காலக்கட்டத்தில் ஏதாவது 6 ஆண்டுகள் மற்றும் கடந்த ஆண்டு முழுவதுமாக இந்தியாவில் இருந்ததற்கான ஆவணங்கள் வேண்டும். இதற்கு முன் இருந்த (முந்தைய) நாட்டின் பாஸ்போர்ட், சொந்த நாட்டின் குடியுரிமையை விட்டு இந்திய குடிமகனாக மாறுவதற்கான உறுதிமொழிச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை (CAA apply documents in tamil) சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- சம்பந்தப்பட்ட நாடு வழங்கிய பிறப்பு சான்றிதழ்
- சம்பந்தப்பட்ட நாடு வழங்கிய அடையாள அட்டை
- சம்பந்தப்பட்ட நாடு வழங்கிய நில உரிமை சான்று
- விண்ணப்பதாரரின் பெற்றோர்கள் அல்லது தாத்தா/பாட்டி அல்லது கொள்ளு தாத்தா/பாட்டி ஆகியவர்களில் யாரேனும் ஒருவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் ஒன்றில் குடியுரிமை பெற்றவர்கள் என்பதை காட்டும் ஆவணம்.
- சம்பந்தப்பட்ட நாடு வழங்கிய பாஸ்போர்ட் நகல்
- இந்தியாவில் FRRO அதிகாரி அல்லது FRO அதிகாரி வழங்கிய பதிவுச் சான்றிதழ்.
2014- ஆம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் வசிததற்கான சான்றுகள்
- மக்கள் கணக்கெடுப்பு ஒப்புகை சீட்டு
- இந்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- பிறப்பு சான்றிதழ்
- பான் கார்டு
- மின்வாரிய அட்டை
- இந்தியாவில் பணியாற்றும் நிறுவனத்தின் ஊழியர் என்பதற்கான சான்றிதழ்கள்
- பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள்
- திருமண சான்றிதழ்
- வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸ் புத்தகம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் (CAA vinnapikka thevaiyana Avanangal) காலாவதி ஆனாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் படிக்க: CAA க்கு எதிர்ப்பு தெரிவித்த புதிய அரசியல்வாதி..! |