கடந்த ஆண்டு சென்னையில் டிசம்பர் 2 முதல் 4 தேதி வரை மிக்ஜாங் புயலால் பெரும் பாதிப்படைந்துள்ளது சென்னை நகரம். 2015-ம் ஆண்டுக்கு பிறகு வந்த பெரும் பாதிப்பு என்றே இதனை கூறலாம். இந்த மழையால் கிட்டதட்ட ஒரு கோடி மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களிலும் மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்படைந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவராண நிதியாக ரூ.6,000 வழங்கப்பட்டது. மத்திய அரசிடமும் தமிழக அரசு வெள்ள பாதிப்பு நிவாரணம் மற்றும் சேதங்களை சீர் செய்ய ரூ.37,000 கோடி ரூபாய் வழங்கும்படி வலியுறுத்தி இருந்தது. ஆனால் மத்திய அரசு (Mathiya Arasu Puyal Nivarana Nithi TN) இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு புயல் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் இந்த கோரிக்கைகள் முக்கிய பிரச்சனையாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண நிதியாக ரூ.285 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு (then Mavatta Vella Nivaranam) ரூ.397 கோடி ரூபாய் வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதில் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக (Cyclone Michaung nivarana nithi) ரூ.285 கோடியிலிருந்து, தற்போது ரூ. 115 கோடி மட்டும் உடனடியாக விடுவிக்கப்பட உள்ளது. இதேபோல் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 397 கோடி நிவாரண நிதியிலிருந்து தற்போது ரூ.160 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
