பூமி மாசுபாடு அடைவது தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மக்கள் தான் அதிக அளவில் பூமியை மாசுபடுத்துகிறோம். பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் உபயோகிப்பதால் பூமி அதிக அளவில் மாசுபாடு அடைகிறது. இவை ஒருபுறம் இருக்க இந்த காலகட்டத்தில் மிகவும் ஆபத்தான ஒன்றுதான் காற்று மாசுபாடு. இதனை குறைக்கதாக மாநில அரசு எலக்டரிக் வாகனங்களுக்கு மானியத்தை (Minsara Vaganangalukku Maniyam) அறிவித்து வழங்கிவருகிறது. இது குறித்த இப்பதிவில் பார்க்கலாம்.
காற்று மாசுபாடு அடைவதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பலவிதமான நோய்கள் தொடர்ந்து உருவாகிவருகிறது. காற்று மாசுபடுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது வாகனங்களின் பயன்பாடு மற்றும் அந்த வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையும் தான் இதற்கு காரணமாக உள்ளது.
இந்த காலத்தில் நூற்றில் 90 சதவீத மக்கள் வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் ஒரு வீட்டிற்கு ஒரு வாகனம் இருந்த காலம் போய் தற்போது ஒரு வீட்டில் உள்ள அனைவருக்கும் தனி தனி வாகனங்கள் என்னும் நிலை வந்துவிட்டது. இதன் காரணமாக காற்று மாசும் அதிகரித்து விட்டது. வாகனம் என்பது மக்களின் அடிப்படை தேவைகளுள் ஒன்றாக மாறிவிட்டது. எனவே அதனை பயன்படுத்தாமல் இருப்பது என்பது மிகவும் கடினம்.
எனவே இதற்காக தான் தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் வந்துவிட்டது. இந்த வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் நாம் காற்று மாசுபாட்டை குறைக்கலாம். நாட்டின் நன்மைக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வரிசையில் தான் தற்போது எலக்டிக் வாகனங்களுக்கு மானியத்தை (Electric Vaganangalukku Maniyam) அறிவித்ததுள்ளது. இது எலக்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்தி காற்று மாசுபடுவதை குறைக்கும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பல வகையான எலக்ரிக் வாகனங்களுக்கு மானியத்தை (Subsidy for Electric Two Wheeler)அறிவித்துள்ளது.
எலக்ட்ரிக் டூவீலர் | ரூ. 1000 |
இ-ரிக்ஷாக்கள் | ரூ. 25000 |
கனரக மூன்று சக்கர வாகனங்கள் | ரூ. 50000 |
இதையும் படியுங்கள்: சூது கவ்வும் 2: படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..! |