மக்களவை தேர்தல் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலின் எதிரொலியாக பல சலுகைகள் மக்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த தேர்தல் காரணமாக பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுவதும், இதற்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள சில திட்டங்களை விரிவுபடுத்துவது என்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது மற்றொரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் மத்திய அரசானது இல்லத்தரசிகளை மகிழ்விக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இது உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட்டது மட்டுமின்றி ஒரு சில குடும்பங்களுக்கு சமையல் சிலிண்டர் இணைப்பு இலவசமாக (Free cooking cylinder) வழங்கப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 37 லட்சம் பயனாளிகளுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது லோக்சபா தேர்தல் வர உள்ளது எனவே இந்த இலவச கேஸ் இணைப்பு (Free Cylinder Scheme)வழங்கும் திட்டத்தை மீண்டும் தொடங்கி அதனை மேலும் விரிவுபடுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் நாடு முழுவதும் இலவச கேஸ் இணைப்பு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: ஒரே நாளில் சரசரவென குறைந்த பூண்டின் விலை..! இவ்வளவு தானா? |