இன்றைய காலகட்டத்தில் அனைத்துப் பொருட்களிலும் அதிக அளவில் கலப்படம் நடைபெறுகிறது. அந்த வரிசையில் தான் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவில் புகழ்பெற்ற பிராண்டுகளின் மசாலா பாக்கெட்டுகளில் எத்திலீன் ஆக்சைடு கலந்து இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் படி இந்திய அளவில் மிகவும் பிரபலமான பிராண்டுகள் அன MDH மற்றும் Everest ஆகிய நிறுவனங்களால் விற்பனை செய்யப்படும் நான்கு மசாலா பிராண்ட்களில் எத்திலீன் ஆக்சைடு என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவை MDH நிறுவனத்தின் Curry Powder, Mixed Masala Powder மற்றும் Sambhar Masala மேலும் Everest நிறுவனத்தின் Fish Curry Masala ஆகியவை ஆகும்.
இவற்றை மனிதர்கள் நீண்ட காலத்திற்கு உட்கொள்ளும் பொழுது உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதனால்
புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இந்த மசாலா பொருட்களுக்கு ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடனடியாக கடைகளில் இருந்து மேற்குறிப்பிட்ட மசாலா பாக்கெட்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எத்திலீன் ஆக்சைடு கலந்து இருப்பதாக கூறப்படும் அந்த மசாலா பாக்கெட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திரும்பப் பெற்று கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்திய சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய மசாலா பொருட்களுக்கு இதுப்போல சிக்கல்கள் ஏற்படுவது இது முதல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: திடீரென்று ரத்து செய்யப்பட்ட எலன் மஸ்க் பயணம்..! காரணம் என்ன தெரியுமா? |