Homeசெய்திகள்அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு மழை..! அடுத்த இரண்டு நாட்களுக்கு கொட்டப்போகும் மழை..!

அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு மழை..! அடுத்த இரண்டு நாட்களுக்கு கொட்டப்போகும் மழை..!

கோடை காலம் தொடங்கியது முதல் கொளுத்தும் இந்த அதிகபட்ச வெயிலால் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இந்த வெயிலால் துன்பப்படும் சூழல் தான் தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் காரணமாக மழை பெய்தால் (Rain in Summer) இந்த கோடையில் வெயில் சற்று குறைந்த குளிர்ந்த சூழல் நிலவும் என்று நம்மில் பலரும் நினைத்து இருப்போம். அனால் இன்றுவரை ஒரு பகுதியில் கூட மழை பெய்யவில்லை என்பது தான் உண்மை.

இந்நிலையில் தான் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை கொட்டி தீர்க்க போகிறது என்று தகவல் (Rain in Tamilnadu) வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதன் படி அதிகபட்சமாக கன்னியாகுமரியில் உள்ள இரணியல் என்னும் பகுதியில் 30 மிமீ மழை பாதிவாகியுள்ளது. அதேபோல திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பகுதியிலும் தலா 30 மிமீ மழை பெய்துள்ளது.

அதேபோல திருச்செந்தூர் AWS, நாலுமுக்கு, குளச்சல், காக்காச்சி உள்ளிட்ட இடங்களில் தலா 20 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் தான் தற்போது சென்னை வானிலை மையம் (Chennai Meteorological Centre) முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் படி மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக இன்று (15.04.2024) தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய அதிக வாய்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளதுழ.

மேலும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவைகள் தவிர்த்து உள்ள மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல நாளை ஏப்ரல் 16-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 17-ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அன்றைய தினம் மற்ற மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Rain News

மேலும் வருகின்ற ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தகவல் (Chennai Meteorological Centre Recent Rain News) வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு… நடந்தது என்?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular