தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் அதிக அளவிலான மக்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலம்.
இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக இருக்கும் செஃப் தாமு (K. Damodaran) மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் (Venkatesh Bhat) இருவரும் நிகழ்ச்சியில் உள்ள குக்குகள் மற்றும் கோமாளிகளுடன் செய்யும் அட்டகாசங்கள் மக்களுக்கு மிகவும் பிடித்தது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர் பட்டாளம் என்பது மிகவும் அதிகமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். இது குக் வித் கோமாளி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து அவர் ஒரு விடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில் அவர் கூறியதாவது, இதற்கு முன்னர் நான் குக் வித் கோமாளி 5-லிருந்து விலகுவதாக அறிவித்தேன். அந்த தகவல் உண்மை தான். இந்த முடிவு எனக்கு மிகவும் வேதனையாக இருந்தாலும் நான் அந்த முடிவில் உறுதியாக தான் இருக்கிறேன்.
மேலும் தொடர்ந்து இதுகுறித்து பேசிய அவர் விரைவில் வரவிருக்கும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் பார்க்க விரும்புகிறேன். இதனால் தான் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறேன் என்று கூறினார். மேலும் ஒரு 4 வருடங்களுக்கு பிறகு எனக்கு பிடித்த நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன். இனிமேல் நான் எனக்கு பிடித்ததை விஷயங்களை செய்யப் போகிறேன். இன்னும் கூடிய விரைவில் ஒரு பெரிய அறிவிப்பு உங்களுக்கு காத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நானும், செஃப் தாமு வும் சேர்ந்து தான் இந்த நிகழ்ச்சியில் கரந்துக்கொள்ள போகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: SK 23: மீண்டும் இணையும் காம்போ..! யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க..! |