பட்டப்படிப்பு முடிக்கவில்லை எனினும் அரசு வேலை வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு (Madras High Court Recruitment 2024 in Tamil). இந்த பதிவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் இதற்கான கல்வித்தகுதி போன்ற அனைத்து தகவல்களையும் பார்க்கலாம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 74 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Madras High Court Jobs Notification பல்வேறு வகையான பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கான கல்வித்தகுதி ஒவ்வொரு பதவிக்களுக்கு மாறுபடுகிறது. அதன்படி இந்த பதவிகளுக்கான கல்வித்தகுதி 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னை உயர் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பில் சீனியர் ஸ்டெனோகிராபர், ஜூனியர் கிரேடு ஸ்டெனோகிராபர், மொழிபெயர்ப்பாளர், ஜூனியர் கிளார்க், தட்டச்சர், டிரைவர், எம்டிஎஸ் போன்ற பணியிடங்கள் நிரப்பப்டவுள்ளன.
Chennai High Court Recruitment-ல் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ஆப்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அதன் பிறகு திறன் தேர்வு மற்றும் நேர்க்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் உள்ளது. இதன்படி எம்டிஎஸ் மற்றும் டிரைவர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டணமாக ரூபாய் 500 மற்றும் இதர பதவிகளுக்கு ரூபாய் 750 செலுத்த வேண்டும்.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mhc.tn.gov.in -க்கு சென்று விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து பின்னர் அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் முறையில் அனுப்ப வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு 24.03.2024 முதல் 23.04.2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் (Chennai High Court Job Vacancy) 74 பணியிடங்கள் ஆகும். இதற்கான சம்பளம் 18,000 முதல் 35,400 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு பதவியை பொருத்தும் மாறுபடுகிறது.
பதவி | காலிப்பணியிடம் |
சீனியர் ஸ்டெனோகிராபர் (Senior Grade Stenographer) | 06 |
ஜூனியர் கிரேடு ஸ்டெனோகிராபர் (Junior Grade Stenographer) | 09 |
மொழிபெயர்ப்பாளர் (Translator) | 02 |
ஜூனியர் கிளார்க் (Junior Clerk) | 23 |
தட்டச்சர் (Typist) | 13 |
டிரைவர் (Driver) | 01 |
எம்டிஎஸ் (MTS) | 20 |
Chennai Uyar Neethi mandra Velaivaippu பற்றிய முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். பின்னர் Chennai High Court Job Application Form பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு..! 8 வது படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..! மிஸ் பண்ணிடாதீங்க..!
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
Salary: 18000-35400
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-03-27
Posting Expiry Date: 2024-04-23
Employment Type : FULL_TIME
Hiring Organization : Madras High Court
Organization URL: https://www.mhc.tn.gov.in/
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, High Ct Rd, Parry's Corner, George Town, Chennai, 600104, India
Education Required:
- High School
- Bachelor Degree