தமிழகத்தை பொருத்தவரையில் வெயில் காலம் என்பது மார்ச் மாதம் முதல் தொடங்குகிறது. இந்நிலையில் தான் தற்போது மார்ச் மாதம் தொடங்கியுள்ளது. தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. மக்களால் தாங்க முடியாத அளவுக்கு தான் வெயில் தற்போது இருக்கிறது. மேலும் தொடர்ந்து வானிலை மிகவும் மோசமாகிதான் வருகிறது.
இந்த நிலையில் தான் அடுத்த ஏழு நாட்களுக்களில் வெயிலின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த தகவலின் படி தமிழகம் முழுவதும் இன்று முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (04.03.2024) முதல் வரும் 5-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை (Hot weather) நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இயல்பை விடவும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக (Temperature in Tamil Nadu) இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எனவே இனி வரும் காலங்களில் வெயிலின் தாக்கமானது கண்டிப்பா அதிகரிக்கும் என்று தகவல் (Hot weather in Tamil Nadu) வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மக்கள் வெளியே செல்லும் போது தண்ணீர் பாட்டில்களை கையோடு கொண்டு செல்லவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தேவையான பொருட்களை உண்ணும் படி கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இளநீர், மோர் போன்ற நீர் ஆகாரங்கள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுயுள்ளனர். மேலும் முக்கியமான ஒன்று வெளியே செல்லும்போது வயதானோர், குழந்தைகளை அழைத்து செல்பவர்கள் மற்றும் பெண்கள், குடையை மறக்காமல் எடுத்துச் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: இந்த வெயிலிலும் பனியால் சூழ்ந்து அழகாக காட்சியளிக்கும் சிம்லா..! எவ்வளவு அழகு..! |