தமிழகத்தில் தற்போது வெயில் அனைவரையும் வாட்டி வருகிறது. கோடை வெப்பத்தை தணிப்பதற்காக மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெப்பத்தின் அளவு சற்று அதிகம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் உள்ளது. தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு Summer (Rain in TN) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த தகவலின் படி தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்களின், காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரவிக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக இன்று ஏப்ரல் 27 ஆம் முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவைஇ காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் வரும் மே 1 தேதி முதல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மே 2 தேதி முதல் மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 தினங்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களின் (Rain For Tamil Nadu 2024) வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்றும், வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39-42டிகிலி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தென்மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை..! |