Homeசமையல் குறிப்புகள்Chettinad Chicken Gravy Recipe: செம்மையான செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி? பார்க்கலாம் வாங்க..!

Chettinad Chicken Gravy Recipe: செம்மையான செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி? பார்க்கலாம் வாங்க..!

Chettinad Chicken Gravy Recipe: அனைவருக்கும் உணவு என்றாலே மிகவும் பிடிக்கும். அதுவும் சிக்கன் உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அசைவ உணவு என்றால் அது சிக்கன் கொண்டு செய்யப்டும் உணவுகளே. அந்த சிக்கன் உணவுகள் பட்டியலில் இந்த பதிவில் நாம் பார்க்க போகும் உணவு செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinad Chicken Recipe in Tamil).

சிக்கனில் செய்யும் உணவுகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். அதுவும் சிக்கன் கிரேவி என்றால் அதனை மதியம் வடிக்கும் சூடான சாதத்தில் போட்டு சாப்பிடுவது என்பது தனி ருசிதான். அந்தளவு சுவைமிகுந்த சிக்கன் கிரேவி செய்வது எப்படி (How to Cook Chettinad Chicken Gravy) என்பதை தான் இந்த பதிவில் பார்க்கவுள்ளோம். இந்த கிரேவியை சாதத்திற்கு மட்டுமின்றி இட்டிலி, தோசை மற்றும் பரோட்டா போன்ற உணவுகளுடனும் சாப்பிடலாம்.

செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி (Chettinad Chicken Gravy Seivathu Eppadi) Chettinad Chicken Gravy Recipe

சிக்கனை கொண்டு செய்யப்படும் செட்டிநாடு கிரேசி ஆகும். இது இந்திய உணவு வகைகளில் ஒன்று ஆகும். செட்டிநாடு சிக்கன், செட்டிநாடு கோழி கறி அல்லது சிக்கன் செட்டிநாடு (Chicken Chettinad) என பல பெயர்கள் இந்த கிரோசிக்கு உள்ளது. இந்த செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வதற்கான செய்முறைகள் மற்றும் தேவையான பொருட்கள் போன்றவற்றை கிழே கான்போம்.

தேவையான பொருட்கள் (Chettinad Chicken Gravy Ingredients in Tamil)

  • சிக்கன் – 1 கிலோ
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • காஷ்மீர் மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
  • மிளகு – 2 ஸ்பூன்
  • சீரகம் – 2 ஸ்பூன்
  • சோம்பு – 2 ஸ்பூன்
  • முழு மல்லி – 3 ஸ்பூன்
  • வரமிளகாய் – 10
  • பூண்டு – 4 பல்
  • இஞ்சி – 2 துண்டு
  • கிராம்பு – 4
  • கல்பாசி – சிறிதளவு
  • ஸ்டார் (நட்சத்திர சோம்பு) – 2
  • பிரிஞ்சி இலை – 2
  • ஏலக்காய் – 4
  • முந்தரி பருப்பு – 10
  • புதினா இலை – தேவையானஅளவு
  • மல்லி இலை – தேவையானஅளவு
  • துருவிய தேங்காய் – தேவையான அளவு
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்முறை (Chettinad Chicken Gravy in Tamil)

  • சிக்கனில் மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டையுமே நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • செட்டிநாடு சிக்கன் கிரேவிக்கு மசாலா (Chettinad Masala) செய்ய முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து கடாய் சூடானதும் 6 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.
  • நல்லெண்ணை சூடான பிறகு அதில் மல்லி, சோம்பு, சீரகம் சேர்த்து அவை கருகாமல் பொன்வறுவலாக வறுத்து கொள்ளவும்.
Chettinad Chicken Recipe
  • அதனுடன் சிறிய வெங்காயம், வர மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ளவும். அவை ஆரிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும். இதுவே சிக்கன் செட்டிநாடு மசாலா (Chettinad Chicken Masala) ஆகும்.
  • அதன் பிறகு மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு பொரிந்த பிறகு பிரிஞ்சி இலை, கல்பாசி, ஏலக்காய், கிராம்பு, சோம்பு பட்டை சேர்த்து பொரிக்கவும்.
  • அதனுடன் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் பிறகு அதனுடன் தக்காளியை சேர்க்கவும்.
  • தக்காளி நன்றாக மசிந்ததும் அதில் சிக்கன் மற்றும் அரைத்த விழுதை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி சில்லி பவுடர் சேர்த்து (தேவைப்படும் காரத்திற்கு ஏற்ப காஷ்மீரி சில்லி பவுடர் சேர்த்துக்கொள்ள வேண்டும்) நல்லெண்ணெய் பிரியும் அளவுக்கு வதக்கவிட வேண்டும்.
  • நன்றாக வதங்கிய பின்பு கிரேவிக்கு தேவையான அளவு நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். சிக்கன் நன்றாக வேக 20 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
  • 20 நிமிடம் கழித்து மூடியை திறந்து அதில் கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி தயார் (Chettinad Chicken Gravy Recipe In Tamil).
Chettinad Chicken Gravy Recipe: செம்மையான செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி? பார்க்கலாம் வாங்க..!

இந்த பதிவில் சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி (Chettinad Chicken Gravy Recipe) என்பதை பதிவிட்டுள்ளோம்.

Type: Dish

Cuisine: Tamil Nadu

Keywords: Chettinad Chicken Gravy, Chettinad Chicken Gravy In Tamil

Recipe Yield: 5

Preparation Time: PT5M

Cooking Time: PT40M

Total Time: PT45M

Recipe Ingredients:

  • Chicken – 1 kg
  • Big onion – 2
  • Tomato – 2
  • Turmeric powder – 1/2 spoon
  • Kashmiri Chilli Powder – 2 tbsp
  • Pepper – 2 spoons
  • Cumin – 2 spoons
  • Anise – 2 spoons
  • Whole coriander – 3 spoons
  • Chilli – 10
  • Garlic – 4 cloves
  • Ginger – 2 pieces
  • Cloves – 4
  • Kalpasi – a little
  • Star (star anise) – 2
  • Brinjhi leaves – 2
  • Cardamom – 4
  • Cashews – 10
  • Mint leaves – as required
  • Coriander leaves – as required
  • Grated coconut – required quantity
  • Curry leaves – As required
  • Ghee – required quantity
  • Salt – required quantity

Recipe Instructions: சிக்கனில் மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டையுமே நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். செட்டிநாடு சிக்கன் கிரேவிக்கு மசாலா (Chettinad Masala) செய்ய முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து கடாய் சூடானதும் 6 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். நல்லெண்ணை சூடான பிறகு அதில் மல்லி, சோம்பு, சீரகம் சேர்த்து அவை கருகாமல் பொன்வறுவலாக வறுத்து கொள்ளவும். அதனுடன் சிறிய வெங்காயம், வர மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ளவும். அவை ஆரிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும். இதுவே சிக்கன் செட்டிநாடு மசாலா (Chettinad Chicken Masala) ஆகும். அதன் பிறகு மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு பொரிந்த பிறகு பிரிஞ்சி இலை, கல்பாசி, ஏலக்காய், கிராம்பு, சோம்பு பட்டை சேர்த்து பொரிக்கவும். அதனுடன் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் பிறகு அதனுடன் தக்காளியை சேர்க்கவும். தக்காளி நன்றாக மசிந்ததும் அதில் சிக்கன் மற்றும் அரைத்த விழுதை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி சில்லி பவுடர் சேர்த்து (தேவைப்படும் காரத்திற்கு ஏற்ப காஷ்மீரி சில்லி பவுடர் சேர்த்துக்கொள்ள வேண்டும்) நல்லெண்ணெய் பிரியும் அளவுக்கு வதக்கவிட வேண்டும். நன்றாக வதங்கிய பின்பு கிரேவிக்கு தேவையான அளவு நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். சிக்கன் நன்றாக வேக 20 நிமிடம் மூடி போட்டு வேக விடவும். 20 நிமிடம் கழித்து மூடியை திறந்து அதில் கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி தயார் (Chettinad Chicken Gravy Recipe In Tamil).

Editor's Rating:
4.5
மேலும் படிக்க: உங்க குழந்தை சரியா சாப்பிடுவது இல்லையா? ஒரு முறை இந்த பன்னீர் தோசை செஞ்சு கொடுங்க..! அப்புறம் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular