நாம் பல விதமான உணவுகளை இதுவரை சுவைத்து இருப்போம். அதிலும் ஒரே காய்கறியை வைத்து பல விதமான ரெசிபிகள் செய்து இருப்போம். அனால் பெரும்பாலான வீடுகளில் வாழைக்காய் என்றால் நினைவிற்கு வருவது வறுவல் மட்டும் தான். அதுவும் எப்போது இதனை ஒரே முறையில் தான் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இந்த வாழைக்காயை வைத்து பல புதிய விதமான ரெசிபிகள் செய்யலாம். அவற்றில் ஒரு ரெசிபி தான் இந்த செட்டிநாடு வாழைக்காய் வறுவல். இந்த ரெசிபி மிகவும் எளிமையாக செய்துவிடலாம். அதுமட்டுமின்றி இதன் சுவை அருமையாக இருக்கும். மதிய உணவின் போது சைட்டிஷ்- ஆக வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். மேலும் நாம் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளுக்கும் இது சூப்பரான டேஸ்டில் இருக்கும். எனவே நாம் இப்பதிவில் செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி (How to Make Chettinad Vazhakkai Varuval in Tamil)
தேவையான பொருட்கள்
- வாழைக்காய் – 3
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
- சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – சுவைக்கேற்ப
மசாலா அரைக்க
- பூண்டு – 4-5 பல்
- இஞ்சி துண்டு – 1 சிறிய துண்டு
- காய்ந்த மிளகாய் – 2
- சோம்பு – 1 டீஸ்பூன்
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
வறுவல் தாளிக்க
- சின்ன வெங்காயம் – 8
- கடுகு – சிறிதளவு
- உளுத்தம் பருப்பு – சிறிதளவு
- பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
- கறிவேப்பிலை – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்முறை (Chettinad Vazhakkai Varuval Recipe in Tamil)
- செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் இஞ்சி, பூண்டு, வரமிளகாய், சோம்பு, மிளகு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- இப்போது நாம் எடுத்து வைத்துள்ள வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு பின்னர் அதை நீளத் துண்டுகளாக நறுக்கி உடனே தண்ணீரில் போட்டு விடவேண்டும்.
- இப்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது காய்ந்த பிறக அதில் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை போட்டு வறுக்கவும்.
- வாழைக்காய் நன்கு பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாற வேண்டும். அதுவரை வாழைக்காயை வறுத்து அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
- இப்போது அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
- இப்போது அதில் சிறிதளவு பெருங்காயத் தூள் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
- நாம் சேர்த்த வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து வதக்கவும்.
- அரைத்த மசாலாவின் பச்சை வாசம் போன பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வதக்கவும்.
- மசாலாக்களின் பச்சை வாசனை போன பிறகு நாம் தனியே வறுத்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் தயார்.
நாம் இப்பதிவில் அனைத்து விதமான சாப்பாட்டிற்கு பொருந்தும் செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி (Chettinad Vazhakkai Varuval Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம்.
இதையும் படியுங்கள்: உங்க குழந்தைங்க வாழைப்பூ சாப்பிட மாட்டேங்குறாங்களா..! இப்படி ஒரு முறை செஞ்சு கொடுங்க..! |