தமிழகத்தில் மட்டமின்றி உலக அளவில் பார்த்தாலும் சிக்கன் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் அசைவம் தான் இந்த சிக்கன். நாம் இதுவரை சிக்கனை வைத்து பல விதமான ரெசிபிகள் செய்து இருப்போம். அனைத்து ரெசிபிகளும் சுவைமிக்கதாக தான் இருக்கும். சிக்கனை வைத்து எந்த ரெசிபி செய்தாலும் அது நன்றாக தான் இருக்கும். இதன் காரணமாக தான் அனைவருக்கும் சிக்கன் மிகவும் பிடித்த அசைவமாக உள்ளது. இப்போது நாம் அந்த சிக்கனை வைத்து சிக்கன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
சிக்கன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி (How to Make Chicken Ghee Roast in Tamil)
தேவையான பொருட்கள் (Chicken Ghee Roast Ingredients)
சிக்கனை ஊறவைப்பதற்கு
- சிக்கன் – 1/2 கிலோ
- எலுமிச்சை பழச்சாறு –1/2 பழம்
- கெட்டி தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
மசாலா அரைக்க
- வர மிளகாய் – 5-6
- வரமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- சோம்பு – 1/2 ஸ்பூன்
- மிளகு – 1/2 ஸ்பூன்
- வெந்தயம் – சிறிதளவு
- பூண்டு – 5 பல்
- ஊறவைத்த புளி – சிறிதளவு
சிக்கன் நெய் ரோஸ்ட் செய்ய
- நெய் – 4 டேபிள் ஸ்பூன்
- ஊறவைத்த சிக்கன் – அரை கிலோ
- வெல்லம் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கறிவேப்பில்லை – தேவையான அளவு
சிக்கன் நெய் ரோஸ்ட் செய்முறை (Chicken Ghee Roast Recipe in Tamil)
சிக்கனை ஊறவைத்தல்
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் சிக்கன், எலுமிச்சை பழச்சாறு, தயிர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசைந்து, அதை ஒரு மணி நேரம் வரை நன்றாக ஊறவைக்க வேண்டும்.
மசாலா அரைக்க
ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் எண்ணெய் சேர்க்காமல் வர மிளகாய், வரமல்லி, மிளகு, சோம்பு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வாசனை வரும் வரை நன்றாக வறுக்கவேண்டும். மிதமான தீயில் வறுக்க வேண்டும். இப்போது அவற்றை நன்றாக ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அதோடு பூண்டு, ஊறவைத்த புளி ஆகியவற்றை சேர்த்து அதோடு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக விழுதாக அரைக்கவேண்டும்.
சிக்கன் நெய் ரோஸ்ட்
- முதலில் ஒரு அகலமான கடாயை எடுத்துக்கொள்ளவும். அதில் தேவையான அளவி நெய் சேர்த்து அதில் நாம் ஒரு மணி நேரம் ஊறவைத்த சிக்கனை சேர்க்க வேண்டும். இதனை 10 நிமிடம் வரை நன்றாக வறுக்க வேண்டும்.
- இப்போது சிக்கனில் தண்ணீர் விட்டு இருக்கும். அதிலிருந்து சிக்கன் துண்டுகளை எடுத்து தனியே வைக்கவேண்டும்.
- இப்போது அந்த கடாயில் உள்ள மசாலா நீரை கொதிக்கவிடவேண்டும். அந்த நீர் நன்றாக கொதித்த பிறகு அதில் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- பின்னர் இதில் சிறிதளவு வெல்லம் சேர்க்க வேண்டும். அதன் பிறக நெய் சேர்த்து 5 வரை நிமிடம் கொதிக்கவிடவேண்டும்.
- இப்போது மசாலாவில் இருந்து நெய் பிரிய தொடங்கியதும், நாம் எடுத்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து, அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாவில் ஈரம் வற்றும் வரை 20 நிமிடம் கிளற வேண்டும். இப்போது இதில் கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்.
நாம் இப்பதிவில் அனைவரும் விரும்பி உண்ணும் சிக்கன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி என்பது குறித்து பார்த்துள்ளோம்.
நாவில் எச்சில் ஊறும் சுவையில் Chicken Ghee Roast... சுலபமான முறையில் செய்வது எப்படி..!
சிக்கனை வைத்து சிக்கன் நெய் ரோஸ்ட் (Chicken Ghee Roast) செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
Type: Side Dish
Cuisine: India
Keywords: Chicken Ghee Roast Recipe, Chicken Ghee Roast
Recipe Yield: 3
Preparation Time: PT20M
Cooking Time: PT30M
Total Time: PT50M
Recipe Ingredients:
- Chicken – 1/2 kg
- Lemon juice – 1/2 lemon
- Curd – one tablespoon
- Salt – required quantity
- Chilli powder – one spoon
- Turmeric powder – quarter spoon
- Ginger garlic paste – one spoon
- Chillies – 5-6
- Varamalli – 1 tablespoon
- Cumin – 1/2 spoon
- Anise – 1/2 spoon
- Pepper – 1/2 spoon
- Fenugreek – a little
- Garlic – 5 cloves
- Soaked tamarind – little
- Ghee – 4 tbsp
- Jaggery – 1 spoon
- No curry – as much as needed
4.5
இதையும் படியுங்கள்: இந்த வீக் எண்ட்ல… சிக்கன் மட்டன்கு பதிலா ஒரு முறை இப்படி Fish Biryani செஞ்சு பாருங்க..! |