தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சியான் விக்ரம் (Chiyaan Vikram). வித்தியாசமான கதாபாத்திரங்களையும் கதைகலத்தையும் தேர்ந்தெடுத்து நடித்தவர் சியான் விக்ரம். இவரின் 62 வது படமான வீர தீர சூரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு (Vikram Next Movie Update) தொடங்கியுள்ளது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரமுக்கு ஒரு நல்ல திருப்புமுனையை கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்து வரும் படம் தங்கலான். இந்தப் படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தங்கலான் படத்தை தொடர்ந்து சியான் விக்ரம் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் அவரின் 62 வது படம். இந்த படத்தை சித்தா பட இயக்குநர் சு. அருண்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு வீர தீர சூரன் (Veera Dheera Sooran) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் இரண்டு பாகமாக தயாராக உள்ளது என கூறப்படுகிறது.
இந்த வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகத்தை முதலாகவும், முதல் பாகத்தை அடுத்ததாகவும் படக்குழுவினர் எடுக்க உள்ளனர் என கூறப்படுகிறது. இந்த படத்தின் வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்பு இன்று (25.04.2024) மதுரையில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விக்கரமுடன் இணைந்யதய எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சாரமூடு மேலும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை இந்த டீசர் கடந்தது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க: தமிழ் திரையுலகில் 50 கோடி வசூல் செய்த முதல் படம் யாருடைய படம் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..! |