செய்திகள்

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மோதல்..! அதிருப்தி அடைந்த கூட்டணி கட்சிகள்..!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதே போல தேர்தல் பிரச்சாரங்களும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சி தலைவர்களும் அவர்களுக்கென்று ஒரு பயணத்திட்டங்களை வகுத்து வைத்துள்ளனர். அதன்படி அவர்களின் தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதன்படி தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களம் காண்கிறது. சில கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. சில கட்சிகள் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலில் களம் காண்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.

மத்தியில் ஆளும் பாரத ஜனதா கட்சிக்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி மத்தியில் ஆட்சியை கைப்பற்ற போராடி வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் கூட்டணி வைக்கவில்லை. கூடுதலாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இந்த வருட மக்களவை தேர்தலில் களம் காண்கிறது. இதில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சற்று பலமான கட்சிகள் என்று கூறலாம். திமுக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களை ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் தான் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மோதல் (Dmk Congress Katchi Problem) ஏற்பட்டுள்ளது. இது கூட்டணி கட்சிகளுக்கிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி கட்சியின் சார்பாக திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை கூட திமுக கட்சியினர் அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் திமுகவுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மாட்டோம் என்று காங்கிரஸ் (Dmk Congress Lok Sabha Election 2024 ) கட்சியினர் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த குற்றச்சாட்டை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சியினர் இது போல தீர்மானம் நிறைவேற்றிருப்பது அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள மற்ற கட்சியினருக்கு மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

மக்களவை தேர்தலில் வெற்றிக்காக போராடி வரும் நிலையில் இந்திய கூட்டணயில் முக்கிய கட்சியாக உள்ள திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி இது போன்று தீர்மானம் நிறைவேற்றிருப்பது தேர்தலில் வெற்றியை பாதிக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க: Postal Vote: சென்னையில் இன்று தொடங்குகிறது..! ஓட்டு போட மறந்துடாதீங்க..!
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago