தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு வகையான புதிய திட்டங்களை அரசு தொடர்ந்து அறிவித்துக்கொண்டு தான் உள்ளது. சமீபத்தில் கூட மத்திய பட்ஜெட் மற்றும் அதைத்தொடர்ந்து வேளாண் பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது. இதன் பட்ஜெட்டில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்கு முன்னர் செயல்பாட்டில் இருந்த பல திட்டங்களும் விரிவுப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி விபத்துகள் மற்றும் பேரிடர் காலங்களிலும் தமிழக அரசு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பெரும் பாதிப்புகுள்ளாகியது. மேலும் அப்பகுதியில் உள்ள மக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் தான் தமிழக அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தது. அதுமட்டுமின்றி இந்த புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 6000 நிவாரணம் (Nivaranam) அறிவித்து வழங்கியது.
இதுபோன்ற சூழல்களில் மட்டுமின்றி மக்கள் துன்பம் அடையும் போது எல்லாம் தமிழக அரசு உதவிகளை செய்கிறது. மேலும் மக்களின் நன்மைக்காக பல புதிய புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளது. இதேபோல தான் தற்போது நிவாரணம் ஒன்றை (3 Lakh Nivaranam) தமிழக அரசு அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்த கொண்ட ராம்கி என்ற நபர் உயிரிழந்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இளைஞர் ராம்கி குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் படுகாயமடைந்த ராம்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்றும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தற்போது ராம்கியின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம் (3 Lakh Nivaranam Ramki Family) வழங்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: 6 அடி உயரத்தில் அம்மா உருவத்தில் கேக்..! எத்தனை கிலோ தெரியுமா? |