தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் பல வகையான வாக்குறுதிகளை அறித்தது. அதன்படி திமுக ஆட்சி அமைத்த பிறகு தங்களின் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு தான் வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK. Stalin) 8,801 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை (Puthiya Thittangal) தொடங்கிவைக்க உள்ளார்.
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் இதுவரை பல்வேறு துறைகளில் தொடங்கப்பட்டு முடிவடைந்துள்ள பல திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்காகக் காணெலி மூலம் திறந்து வைக்க உள்ளார். இத்திட்டதில் (New projects) சென்னை மருத்துவக் கல்லூரி அருகே கட்டப்பட்டுள்ள ஈவினிங் பஜார் சாலை மற்றும் ஈவேரா பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பிற்கு குறுக்கே ரூ.9.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2-ம் சுரங்க நடைபாதையையும் இன்று திறந்து வைக்கிறார்.
இதுமட்டுமின்றி ரூ.111.35 கோடி செலவில் தூத்துக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் நீர்வளத்தறை சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாசன கட்டமைப்புகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் ஆகியவற்றையும் மேலும் திருச்சி மாவட்டத்தில் ரூ.414 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீரொழுங்கி மற்றும் அலுவலர்களின் வசதிக்காக ரூ.4.48 கோடி மதிப்பிலான 50 ஈப்புகளையும் வழங்குகிறார்.
மேலும் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.210.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண் கட்டடங்கள் மற்றும் ரூ.12.27 கோடி செலவில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறையினரால் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் குடியிருப்புகள், வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் போன்றவற்றையும் இன்று முதல்வர் தொடங்கிவைக்கிறார்.
இவைகள் மட்டுமின்றி தமிழக மக்களின் நன்மைக்காக தமிழக அரசு மற்றும் அரசு துறையினரால் உறுவாக்கப்பட்டுள்ள மொத்தம் 8,801 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இன்று தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் தொடங்கி (New Schemes Started By CM Stalin) வைக்கிறார். இந்த புதிய திட்டங்கள் முதல்வர் மு. க.ஸ்டாலின் அவர்களால் (Chief Minister Stalin will launch new schemes) காணொளி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கவுள்ளார்.
இதையும் படியுங்கள்: போதைப்பொருள் கடத்தல் வழக்கு..! முன்னாள் திமுக பிரமுகருக்கு சம்மன்..! |