பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாகும். இதுவரை நான்கு சீசன்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இன்னும் சில வராங்களில் தொடங்கவுள்ளது. இந்த சீசன் மீதான எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகவும் அதிகமாக உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தான் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானது. இந்த புரோமோ மூலம் இந்த சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக களமிறங்கும் புதிய நடுவரை அடையாளம் காட்டி இருந்தனர். இந்த சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜன் நடுவராக களமிறங்குகிறார். இந்த நிலையில் தான் தற்போது இந்த சீசனில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் (Cook With Comali Season 5 Contestants) பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சீசனில் போட்டியாளர்களாக (Cook With Comali 5 Contestants) கலந்துக்கொள்ள பல பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி இந்த சீசன் குக் வித் கோமாளியில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ் பாண்டே கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவருடன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் சீரியல் நடிகரான வசந்த் ஆகியோரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இவர்கள் மட்டுமின்றி நடிகை திவ்யா துரைசாமி மற்றும் நடிகர் வி.டி.வி கணேஷ் மற்றும் பிரபல youtuber-ஆன இர்பான் என பலரும் இந்த சீசனில் (Cook With Comali This Season Contestants) கலந்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் தவிர, கடந்த பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட தினேஷ் மற்றும் பூர்ணிமா ரவி ஆகிய கலந்து கொள்ள இருப்பதாவும தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதுச்சேரி மாநிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் பிரெஞ்சுக்காரரான கிருஷ்ணா மெக்கன்சி இந்த சீசனில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது மற்றும் சீனியர் நடிகைகளில் நடிகை அம்பிகா கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதும் இன்னும் வெளியாகவில்லை எனவே நாம் பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இதையும் படியுங்கள்: கர்ப்பிணி பெண்களுக்கு ஓர் நற்செய்தி..! அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு..! |