Homeவிளையாட்டுமோசமான சாதனை படைத்த CSK அணியின் கேப்டன் ருதுராஜ்..!

மோசமான சாதனை படைத்த CSK அணியின் கேப்டன் ருதுராஜ்..!

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் அனைத்து அணிகளும் தங்களது சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் சிஎஸ்கே அணியும் நல்ல முறையில் தான் விளையாடி வருகிறது. எனினும் அணியில் சில தடுமாற்றங்கள் இருக்க தான் செய்கிறது. எனவே கடந்த இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்று தான் கூறவேண்டும்.

இந்த நிலையில் தான் நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அணியின் கேப்டன் ருத்ராஜ். எனினும் ஒரு மோசமான சாதனையை (Ruturaj Gaikwad Poor Record) அவர் படைத்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன் படி சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 210 ரன்கள் அடித்தது. இதில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) 60 பந்துகளில் 3 சிக்ஸ், 12 ஃபோர்ஸ் உட்பட 108 ரன்கள் அடித்தார்.

பின்னர் களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 213 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் லக்னோ அணிக்காக சிறப்பாக விளையாடிய ஸ்டாய்னிஸ் 63 பந்துகளில் 6 சிக்ஸ், 13 ஃபோர்ஸ் உட்பட 124 ரன்கள் அடித்தார். இதன் காரணமாக லக்னோ அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் மூலம் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் சதம் அடித்தும் தோல்வி அடைந்த கேப்டன் என்னும் மோசமான சாதனையை படைத்துள்ளார். மேலும் இதற்கு முன்னர் இந்த பட்டியலில் சஞ்சு சாம்சன் (119), சச்சின் (110), கோலி (110) என்று மூவரை தொடர்ந்து தற்போது ருதுராஜ் கெய்க்வாட் 4-வது வீரராக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular