Homeவிளையாட்டுCSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி..! முக்கிய வீரருக்கு ஏற்பட்ட காயம்..! இந்த சீசனில் விளையாடுவாரா?

CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி..! முக்கிய வீரருக்கு ஏற்பட்ட காயம்..! இந்த சீசனில் விளையாடுவாரா?

இன்னும் மூன்று நாட்களில் IPL தொடர் தொடங்கவுள்ளது. இந்த வருட ஐபிஎல்-ன் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் நடைபெறவுள்ளது. இந்த போட்டி மீது மக்கள் அதிக எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். இந்த இரண்டு அணிகளும் அதிக அளவிலான ரசிகர்களை வைத்திருக்கும் அணிகள் ஆகும்.

கடந்த ஆண்டு சாம்பியனான சென்னை அணி இந்த ஆண்டு எவ்வாறு விளையாடும் யார் எல்லாம் அணியில் இடம் பெறுவர் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் தான் தற்போது சென்னை அணியின் முக்கிய வீரருக்கு போட்டியின் போது காயம் ஏற்பட்டுள்ளது. இது சென்னை அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தான் தற்போது சென்னை அணியின் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது பலத்த காயமா மற்றும் இந்த வீரர் இந்த சீசனில் விளையாடுவாரா என்று பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

CSK Player Mustafizur Injured

இந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது வங்கதேச வீரர் முஸ்தபிசுர் (Bangladesh player Mustafizur) காயமடைந்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடும் வீரர் ஆவார். இன்னும் 3 நாட்களில் ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில் CSK வீரருக்கு காயம் (CSK Player Mustafizur Injured) எற்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தயில் கவலையை ஏற்படுத்தயுள்ளது. இதற்கு முன்னர் CSK அணியின் வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் பதிரானா ஆகியோர் காயம் காரணமாக அணியில் இணையாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: அம்பானி வீட்டு திருமணத்தில் சமையலில் கலக்கும் தமிழர்..! யார் இவர்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular