இந்த வருடத்தின் ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் அனைத்து அணிகளும் தங்களது சிறந்த விளையாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தான் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
சென்னை அணி தொடர்ந்து சிறப்பான விளையாட்டின் மூலம் மொத்தம் 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சென்னை அணியின் வீரர்கள் தான். அனைத்து வீரர்களும் தங்களது சிறந்த ஆட்டத்தின் மூலம் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளனர். இதன் காரணமாக போட்டிகளில் அணி வெற்றி பெற முடிகிறது.
மேலும் சென்னை அணியின் வீரர்கள் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வரிசையில் தான் சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளரான துஷார் தேஷ்பாண்டே புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் (Tushar Deshpande New Record). இதுக்குறித்த விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசனில் துஷார் தேஷ்பாண்டே விளையாடி வருகிறார். இந்த நிலையில் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக டாட் பால் வீசிய வீரர் என்னும் சாதனை (Tushar Deshpande New IPL Record) தற்போது அவர் படைத்துள்ளார்.
இந்த தகவலின் படி இதுவரை அவர் விளையாடியுள்ள போட்டிகளில் மொத்தம் 22 ஓவர்களுக்கு பந்து வீசியுள்ளார். இந்த 22 ஓவரில் 60 டாட் பால்கள் வீசி அசத்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் கூட அவர் 4 ஓவர்கள் வீசி வெறும் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இந்த சாதனை (Tushar Deshpande IPL Record) சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: IPL 2024: வரலாற்று சாதனை படைத்த தோனி..! தல எப்பவுமே மாஸ் தான்..! |