இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவுள்ளது. இத்தனை வருடங்களாக தோனியிடம் இருந்த கேப்டன் பதவி இந்த சீசன் முதல் ருத்துராஜிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வை சிஎஸ்கே அணியின் பயிற்ச்சியாளர் கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக முடிவு (Dhoni Captaincy Resignation) செய்த உடன் அதை முதலில் சக வீரர்களுக்குதான் அறிவித்தார். மேலும் அவர் அறிவித்த போது அந்த அறையில் நடந்த நெகிழ்ச்சியான தருணங்களை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறி இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் என்றால் அது தோனி சென்னை அணியில் இருப்பது தான். சிஎஸ்கே என்றாலே தோனி தான் என்ற நிலையில் தான் சிஎஸ்கே அணி இருக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் கடந்த சீசன் வரை தேனி தான் அணியின் கேப்டனாக இருந்தார். மேலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
இடையே சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே மீண்டும் தோனி அணியின் கேப்டன் பதவியை ஏற்றார். இந்த நிலையில் தான் நடப்பாண்டான 2024 ஐபிஎல் தொடர் தான் தோனியின் கடைசி IPl கிரிக்கெட் தொடர் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டை அடையாளம் காட்டி விட்டு கேப்டன் பதவியில் இருந்து விலகி இருக்கிறார் தோனி.
இந்த அறிவிப்பை தோனி முதலில் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவிடம் அறிவித்துள்ளார். மேலும் சிஎஸ்கே அணியின் அறையில் அனைத்து வீரர்களும் இருந்த போது தான் தோனி தன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் இனி கேப்டனாக இருப்பார் எனவும் அறிவித்துள்ளார்.
அப்போது அந்த அறையில் இருந்த அனைத்து வீரர்களும் கனத்த இதயத்துடன் கலங்கி நின்றதாகவும் (CSK Players in Tears), மேலும் கண் கலங்காத (CSK Players Cry Moment) ஒரு வீரரைகக் கூட அங்கு இல்லை என்று பயிற்ச்சியாளர் பிளெம்மிங் தெரிவித்துள்ளார். எனினும் அதன் பின்னர் அனைவரும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தோனி சிஎஸ்கே அறையில் தனது முடிவை வெளியிட்ட பின்னர் தான் அணி நிர்வாகம் இதை செய்தியாக வெளியிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: ருத்ராஜின் கேப்டன் பதவி குறித்து ரவிசந்திரன் அஸ்வினின் கருத்து..! |