சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிஎஸ்கே அணி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று 46-வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இதன் மூலம் சென்னை அணி தனது 35வது 200க்கும் அதிகமான ஸ்கோர் என்னும் இலக்கை எட்டியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 35 முறை 200க்கும் அதிகமாக ரன் குவித்து இந்த சாதனையை (CSK New World record) எட்டி உள்ளது.
இதன் மூலம் சென்னை அணி ஐபிஎல் தொடரில் மட்டும் 32 முறை 200-க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து கவுண்டி அணியான சோமர்செட் டி20 போட்டிகளில் 34 முறை 200க்கும் அதிகமாக ரன் சேர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையை இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings New Record) முறியடித்துள்ளது.
இந்த பட்டியலில் நம் இந்திய கிரிக்கெட் அணி 31 முறை, 200-க்கும் அதிகமான ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 31 முறை, 200-க்கும் அதிகமான ரன்கள் எடுத்து நான்காவது இடத்திலும், இங்கிலாந்து கவுன்டி அணியான யார்க்ஷயர் 29 முறை 200-க்கும் அதிகமான ரன்கள் எடுத்து ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
இதையும் படியுங்கள்: T20 World Cup: ஐபிஎல் எதிரொலி… பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அணியில் இல்லை..! களமிறங்கும் புதுமுகங்கள்..! |