இந்த வருட ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசன் ஐபிஎல்லின் 17-வது சீசன் ஆகும். இந்த வருடம் மார்ச் மாதம் 22-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெற்றப்பெற்றது.
அதன் பிறகு சென்னை அணியின் இரண்டாவது போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் விளையாடியது. இந்த போட்டியிலும் சென்னை அணி தான் வெற்றிப்பெற்றது. மூன்றாவது போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் நடைபெற்றது இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 2 போட்டிகளில் வெற்றியும் 1 போட்டியில் தோல்வியையும் பெற்றுள்ளது.
சென்னை அணி தனது அடுத்த போட்டியில் ஹைதராபாத் அணியுடன் வரும் 5ம் தேதி விளையாடவுள்ளது. அதன் பிறகு ஏப்ரல் 8-ம் தேதி கொல்கத்தா அணியை சந்திக்க உள்ளது (CSK vs KKR). இந்நிலையில் தான் தற்போது இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை வரும் 5-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும் (CSK vs KKR Match Tickets Release Date) என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Paytm மற்றும் www.insider.in என்ற இணையதளம் வாயிலாக டிக்கெட்களை பெறலாம் எனவும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விலை (CSK vs KKR Match Ticket Price) 1,700 முதல் 6,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: Voter ID இல்லையா..? ஆனாலும் வாக்களிக்கலாம்… இந்த ஆவணம் இருந்தால் போதும்! |