தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துவிடுவார்கள். அந்த வகையில் தமிழில் இரண்டு, மூன்று படங்கள் மட்டுமே நடித்து இன்றளவும் மக்கள் மனதை விட்டு நீங்காத ஒரு நடிகர் என்றால் அவர் ஹம்சவர்தன்.
இவரை புன்னகை தேசம் ஹம்சவர்தன் (Tamil Actor Hamsavardhan) என்று கூறினால் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு இவரின் நடிப்பு திறமை அந்த படத்தில் வெளிகாட்டியிருப்பார். ஹம்சவர்தன் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஆவார்.
நடிகர் ஹம்சவர்தன் புன்னகை தேசம், மந்திரன், மானசீக காதல், போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்து வந்தார். தற்போது இவரின் புகைப்படங்கள் இணையத்தில வைரலாகி கொண்டு வருகிறது.
தற்போது இவருக்க இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். இவரின் மனைவி கடந்த ஆண்டு 2021-ல் கொரோனாவில் உயிரிழந்தார். இந்நிலையில் இவரின் புகைப்படங்கள் தற்போது (Tamil Actor Hamsavardhan Recent photos) இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரை இணையத்தில் பார்த்த பலரும் புன்னகை தேசம் ஹம்சவர்தனா இது? என்று ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டு (Punnagai Desam Hamsavardhan) வருகின்றனர்.