சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரபலங்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்களில் அனைவருக்கும் அதற்கு பிறகு அதிக படவாய்ப்புகள் கிடைப்பது இல்லை. ஆனால் சிலர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர். இந்த வரிசையில் தான் தற்போது புகழ் இணைந்துள்ளார். இவர் விஜய் டிவியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு அதன் பிறகு குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பிறகு வெள்ளித்திரையில் இருந்து வாய்ப்புகள் வர தொடங்கியது. பின்னர் ஒரு சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது ஒரு படத்தில் (CWC Pugazh New Movie) கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்த படத்திற்கு கமிஸ்டர் ஜூ கீப்பர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தினை இயக்குனர் ஜே. சுரேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தினை தயாரிப்பாளர் J4 ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்ப்படுகிறது.
இந்த நிலையில் தான் தற்போது மற்றொரு படத்தில் (CWC Pugazh Next Movie) கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு டைமண்ட் தோனி (Diamond Dhoni) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை (Diamond Dhoni Movie Poster) புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது புகழ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: விரைவில் வரவிருக்கும் விஷ்ணு விஷாலின் முண்டாசுப்பட்டி 2..! |