Homeசினிமாமஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை திருமணம் செய்யும் அபர்ணா தாஸ்..! யார் தெரியுமா?

மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை திருமணம் செய்யும் அபர்ணா தாஸ்..! யார் தெரியுமா?

தமிழில் கவின் நடிப்பில் வெளியான டாடா என்னும் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அபர்ணா தாஸ். இவர் ஒரு மலையாள நடிகை ஆவார். ஆனால் டாடா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார். இந்நிலையில் தான் தற்போது அவர் திருமணம் செய்ய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இவர் சமீபத்தில் வெளியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் ஒருவரை தான் திருமணம் செய்யவுள்ளார்.

அபர்ணா தாஸ் Njan Prakashan என்னும் படம் மூலம் தான் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் அவர் நடித்த 2வது படம் தான் மனோகரம். இந்த படத்தில் இவருடன் நடித்த தீபக் பரம்பொல் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு பல படங்களில் நடித்த அபர்ணா தாஸ் தற்போது அவரை திருமணம் செய்ய உள்ளார் (Dada Actress Aparna Das Marriage) என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இதுவரை அபர்ணா மற்றும் தீபக் பரம்போல் என இருவர் சார்பிலும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் தற்போது அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரம்போல் இவருரின் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் இவர்களது திருமணம் இந்த மாதம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சமூக வளைதளங்களில் பரவி வரும் அந்த திருமண அழைப்பிதலின் படி ஏப்ரல் மாதம் 24-ம் தேதி புதன்கிழமை (Dada Actress Aparna Das Marriage Date) இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: CSK vs KKR Match Ticket: சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டி..! டிக்கெட் விற்பனை தொடங்கும் நாள் அறிவிப்பு..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular